சுவற்றின் மேல் எழுதப்பட்ட கையெழுத்து THE HAND WRITING ON THE WALL 58-01-08 சிகாகோ, இல்லினாய், சியாசே 1. இது புதன் கிழமை இரவாய் இருக்கின்றபடியினால், நானும் கூட நேற்று சாயங்காலம், கர்த்தர் அனுமதிப்பாரானால், இன்றிரவு "சுவற்றின் மேல் எழுதப்பட்ட கையெழுத்து'' என்ற பொருளின் பேரில் பேசப் போகிறேன் என்று வாக்களித்தேன். அது ஒரு பெரிய..... ஓ , அதன் பேரில் பேசப் பல வாரங்கள் எடுக்கலாம், அப்படி இருந்தும் அதன் சிறு பகுதியை கூட புரிய முடியாத அளவிற்கு (never scratch the surface) பெரிய பொருள். ஆனால், இன்றிரவு நான், பரிசுத்த ஆவியின் உதவியினால் அந்த பொருளின் ஒரு பகுதியை சுருக்கமாக எடுத்துச் சொல்ல முயற்சிப்பேன். இப்பொழுது நான், தானியேலின் புஸ்தகம் 5-ம் அதிகாரம், 25-ம் வசனத்தை வாசிக்க விரும்புகிறேன். அது இந்த வண்ணமாய் வாசிக்கப்படுகிறது. எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால் : மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே. தானி 5:25 வாசிக்கப்பட்ட இந்த பாகத்திற்கு கர்த்தர் தாமே அவருடைய ஆசீர்வாதத்தைக் கூட்டுவாராக. 2. இக்கட்டிடத்தின் பொறுப்பாளர், நம்முடைய நல்ல சகோதரன் இந்த பிரகாசமான விளக்குகளை அணைக்கக் கூடுமோ என்று கேட்கிறேன். ஏனென்றால், நேராக இந்த பக்கமாக கதிர்கள் வீசுகிறது. உமக்கு மிக்க நன்றி. என்னால் வந்துள்ளவர்களைப் பார்க்கவே முடியவில்லை. நான் யாரிடமாவது பேசும் போது, நான் பேசுகின்றவர்களின் முகத்தைப் பார்த்துப் பேசத் தான் எனக்கு விருப்பம். அது ஜனங்களோடு கூட ஒரு தனிப்பட்ட தொடர்பை (a personal contact) கொண்டுள்ளது போல் இருக்கிறது. 3. இப்பொழுது, என்னுடைய நேரத்தை எடுத்துக்கொள்ளவும், இந்த பொருளின் பேரில் பேசவும் நாம் முயற்சிக்கையில், நாம் இன்றிரவு நம்முடைய கர்த்தர் பேரில் நம்பிக்கையாய் இருக்கிறோம். இது ஒரு மிகப் பெரிய பொருள் என்று நான் அறிவேன். இது ஒரு சுவிசேஷ ஊழியப் பொருளேயன்றி, தெய்வீக சுகமளிக்கும் கூட்டத்துக்கு அடுத்ததல்ல. ஆனால், இது தெய்வீக சுகமளித்தலின் மகத்தான ஒரு காரியத்திற்கானது. இன்றிரவிலே, இப்பூமியின் மீது நான் அறிந்த மிக சுகவீனமான சரீரம், இயேசு கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரமேயாகும். உண்மையாகவே தெய்வீக சுகம் தேவைப்படும் அளவுக்கு அது அவ்வளவு பெலவீனப்பட்டும், நொறுக்கப்பட்டும் இருந்தது. 4. இப்பொழுது, இன்றிரவு நமது பொருள் பாபிலோனில் ஆரம்பமாகின்றது. இன்னமும் இருக்கின்றதான சிநெயார் என்னுமிடத்தில் முதன் முதலில் பாபிலோன் இருந்தது. முதலாவதாக அது 'பாபேல்' என்று அதாவது 'தேவனுடைய வாசல்' என்றழைக்கப்பட்டது, பின்னர் அது பாபிலோன் என்று அழைக்கப்பட்டது. பாபிலோன் என்றால் 'குழப்பம்' (confusion) என்று அர்த்தம். பாபிலோன் முதலாவது காணப்படுவது வேதத்தின் ஆரம்பத்தில், ஆதியாகமத்தில். பின்னர் வேதத்தின் மத்தியில் காணப்படுகிறது. அதற்கு பின்னர், வேதத்தின் இறுதியில் கடைசி புஸ்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷத்தில் அது காணப்படுகின்றது. வேதாகமம் முழுவதின் ஊடாகவும் அது இருக்கின்றபடியினால், இன்றைக்கும் அது இருக்கின்றதாய் இருக்க வேண்டும். 5. ஆவிக்குரிய பிரகாரமான வழியிலே இன்றைக்கு பூமியின் மேலுள்ள எல்லா காரியங்களும், தேவனுடைய ஆவி, பிசாசினுடைய ஆவி போன்றவைகள், இன்றைக்கு உலகில் உள்ளதான பலவிதமான மதப்பிரிவுகள் எல்லாம் ஆதியாகமத்தில் துவங்கின. ஆதியாகமம் என்பதன் அர்த்தம் 'துவக்கத்திலே' (the beginning) என்பதாகும். அந்த காரியங்கள் எல்லாம் இன்னமும் வேறொரு பெயரின் கீழ் மற்றும் வேறொரு ரூபத்தில் உள்ளன. ஆனால், ஆதியாகமத்தில் ஆரம்பமான அதே ஆவிதான், அவைகளை இன்றைக்கும் கொண்டு வருகிறது. அது ஒரு மரம் வளருகிறது போன்று, வளர்ந்து தலைக்கு வந்து, அங்கே அது முடிவிலே ஒரு உச்சக்கட்டத்துக்கு வந்து, தேவனின் மகா பெரிதான நியாயத்தீர்ப்புக்கு வரும். அங்கே தேவன் எல்லா காரியங்களையும் தீர்த்து வைப்பார். துவக்கம் என்ற ஒன்றை உடைய எல்லா காரியங்களுக்கும் முடிவு என்ற ஒன்றிருக்கும். துவக்கம் என்ற ஒன்று இல்லாததாய் இருக்கிற ஒன்றுக்கு, முடிவு என்ற ஒன்று இருக்காது. 6. அதன் காரணமாகத் தான் மறுபடியுமாய் பிறந்த கிறிஸ்தவர்களுக்கு முடிவு என்று ஒன்று ஒரு போதும் இருக்காது, ஏனென்றால், அவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. நித்திய ஜீவன் என்பது தேவனுடைய சொந்த ஜீவனின் ஒரு பகுதியாய் இருக்கிறது, தேவன் நித்தியமானவராய் இருக்கிறார். அதே வார்த்தை கிரேக்க பாஷையில் 'சோயி' (Zoe) என்பதாகும், அது 'தேவனுடைய ஜீவன்' என்று பொருள்படும். இயேசுவானவர், நான் அவர்களுக்கு 'நித்திய ஜீவனைக்' கொடுப்பேன் என்று சொன்ன போது, கிரேக்க பாஷையிலே 'சோயி' (Zoe) என்ற அதே வார்த்தை அங்கு உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனபடியினால், மறுபடியும் பிறந்தவனாக இருக்கும் ஒரு மனிதன், அவனுடைய ஆவி மாற்றப்பட்டவனாக, அவன் தேவனுடைய ஒரு பகுதியாக ஆகிறான். இன்னமுமாக சொல்லப் போனால், அவன் ஒரு தேவனுடைய குமாரனாய் இருக்கிறான். தேவன் எவ்வளவு நித்தியமானவராக இருக்கிறாரோ, அவ்வளவு நித்தியமானவனாய் இவனும் இருக்கிறான். ஏனெனில், அவன் தேவனுடைய ஒரு பகுதியாய் இருக்கிறான், அவனுடைய பிறப்பினால், அதாவது ஆவிக்குரிய பிறப்பினால். 7. இப்பொழுது, காமின் குமாரனாகிய நிம்ரோத் என்ற பெயரை உடைய ஒரு மிகவும் பொல்லாத மனிதனால் பாபிலோன் ஸ்தாபிக்கப்பட்டது. 8. பாபிலோன் ஒரு காலத்தில் உலகத்தின் தலைநகராய் இருந்தது. இந்த மகாப் பெரிய பட்டணம் அங்கே கட்டப்பட்ட போது, அதை சுற்றிலுமிருந்த எல்லா சிறிய பட்டணங்களும் கப்பம் (tribute), வரி முதலானவைகளை இந்த பெரிய பட்டணமாகிய பாபிலோனுக்கு கட்டினார்கள். 9. அநேக பண்டைய கால சரித்திரங்களையும், ஹிஸ்லாப் எழுதிய 'இரண்டு பாபிலோன்கள்' என்பது போன்ற பழைய புத்தகங்களையும் நீங்கள் படித்துப் பார்ப்பீர்களானால், அவைகளில், எல்லாவிதமான புதுமையான உபதேசங்களையும் அங்கே அவர்கள் பெற்றிருந்ததாகக் காணலாம். அங்கே அவர்களுக்கு ஒரு ஸ்திரீ இருந்தாள். அவள் பெயரை இந்நேரத்தில் எனக்கு கூற இயலவில்லை, அவள் விநோதமான வேர்களைக் கண்டு, அவைகளை பூமியிலிருந்து எடுத்து, அவைகளிலிருந்து தேவர்களை உண்டு பண்ணுவாள். யாக்கோபு அவனுடைய மாமனார் வீட்டிலிருந்து கொண்டு போன தேவர்கள் அவைகள் தான் என்று நம்பப்படுகிறது, வேர்களின் தேவர்கள் (gods of roots) போன்ற சிலவற்றை வெறுமனே சில இசங்களும் (isms), அவைகளிலிருந்து இன்றைக்கு நாம் காண்கிற உலகில் உள்ளதான பலவித மதப் பாகுபாடுகள் போன்ற எல்லாம் வெளி வந்தன. அவைகளின் குணாதிசயங்களையும், இன்றைக்கு உள்ளவைகளின் குணாதிசயங்களையும் நன்றாய் கவனித்துப் பார்ப்பீர்களேயானால், அவைகள் அதே குணாதிசயங்களே ஆகும். 10. ஆகவே, செழிப்பான அந்த பள்ளத்தாக்கிலே பாபிலோன் அமைந்திருந்து, யூப்ரடிஸ், டைக்ரிஸ் என்ற ஆறுகளால் சூழப்பட்டதாய் அது நீர் பாய்ச்சப்பட்டது. அது ஒரு பெரிய விவசாய மையமாயிருந்தது. பாபிலோன் ஒரு மகா பெரிய பட்டணமாயிருந்தது. ஏறக்குறைய அந்த பட்டணத்தின் சுற்றளவு 120 மைல்களாகும். ஒவ்வொரு பக்கத்திலும் சுமார் 30 மைல்கள் என்ற விதத்தில் அதன் சுற்றளவு சுமார் 120 மைல்களாக இருந்தது. பாபிலோனின் வீதிகளின் அகலம் 200 அடிகள் என்று கூறப்படுகிறது. அதன் மதில்கள் 80 அடி அகலமும், 200 அடி உயரம் கொண்டதாயும் இருந்தது. அந்த சுவர்களைச் சுற்றி இரதங்களைக் கொண்டு இரத ஓட்டப்பந்தயமே நடத்தலாம். அதன் கதவுகள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. அந்த கதவுகள் அப்பொழுதே 200 அடி அகலமுள்ளதாய் இருந்தது. சரியாக, பட்டணத்தின் மையத்தில் அரண்மனையும், அந்த அரண்மனையே சிங்காசனமுமாய் இருந்தது. அந்த மகா பெரிய பட்டணத்தின் மையத்தின் வழியாக பெரிய நதியான யூப்ரடிஸ் ஓடினது. நீங்கள் அதை கவனிப்பீர்களே ஆனால், அது பிசாசின் பட்டணமாய் இருக்கிறது. ஏனெனில், அது தேவனுடைய பட்டணத்தின் மாதிரியாக அதாவது சிங்காசனத்திற்கு முன்பாக ஜீவ நதி ஓடினது போன்று அது கட்டப்பட்டிருந்தது. இந்த பட்டணத்தில், அவர்களுடைய மதில்களைசுற்றிலும், பெரிய ஊசலாடும் தோட்டங்கள் இருந்தன. 11. அது, தான் அறிந்த உலகத்தை தனது சவுக்கினால் அடக்கும் வரைக்கும், அந்த நாட்களில் அது அவ்வளவு பெரிய வல்லமை உள்ள ஒரு தேசமாய் இருந்தது. முழு உலகமும் அதற்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்தது. அது விஞ்ஞானத்தில் மேலும் வளர்ந்திருந்து, விஞ்ஞானம் தற்சமயம் உண்டாக்கக் கூடிய காரியங்கள் எல்லாவற்றையும் அன்றைக்கு அது உடையதாய் இருந்தது. தற்காலத்தில் உள்ள இரதங்களையும், தற்காலத்தின் மாதிரிகளையும் போன்று, அதிக வல்லமை வாய்ந்த போர் ஆயுதங்களையும், உலோகங்களில் சிறந்தவைகளையும் உடையதாயிருந்தது. உலகத்தின் மற்ற ஏனைய பாகங்களுக்கும் அது தலை சிறந்ததாய் காணப்பட்டது. 12. இன்றிரவு நாம் பேசிக் கொண்டிருக்கின்றதான இந்த சம்பவம் நிகழ்ந்த சமயத்தில், அந்த சுவர்களுக்குள்ளாக பெல்ஷாத்சார் என்பவன் ராஜாவாக இருந்தான். பெல்ஷாத்சார் ராஜாவைப் பற்றி, "அவனுடைய தகப்பனார் நேபுகாத்நேச்சார்" என்று வேதம் கூறுகிறது. ஆனால் உண்மையாகப் பார்க்கப் போனால், அவன் அவனுடைய தாத்தாவாகிய நேபுகாத்நேச்சாருக்குப் பின் பட்டத்திற்கு வந்தான். 13. பொன்னினால் ஆகிய தலையாகிய பிறஜாதியாரின் ராஜ்ஜியத்திற்கு நேபுகாத்நேச்சார் துவக்கமாயிருந்தான் என்று உங்களில் அநேகருக்கு நினைவிருக்கும். அவன் அநேக மைல்களுக்கு அப்பால் உள்ள எருசலேமுக்குள் ஊடுருவி, யூதர்களை கைப்பற்றி, அவர்களை தன் ராஜ்ஜியத்திற்குள் கொண்டு வந்து, அவர்களை அடிமையாக்கி, அவர்களுடைய விஞ்ஞானிகளை உபயோகப்படுத்தி... இந்த விதமாக அவன் செய்தான். 14. ரஷ்யா, ஜெர்மனிக்குள் போன போது செய்தது போன்று அது இருந்தது. அதன் நிமித்தமாகத்தான் அவர்களிடம் அணுகுண்டு முதலானவைகள் இருக்கின்றன, அவர்கள் அந்த ஜெர்மானிய விஞ்ஞானிகளைக் கொண்டு வந்துவிட்டார்கள். அக்காரியத்தின் நிமித்தமாகத் தான் இன்றைக்கு ரஷ்யா இவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர். அவர்களிடத்தில் அப்படிப்பட்ட காரியம் கிடையாது, ஆனால் நேபுகாத்நேச்சார் யூதர்களுக்கு செய்தது போன்று, அவர்கள் போய் அந்த காரியங்களை கொண்டு வந்தார்கள். 15. மேலும், இந்த சமயத்தில் தான் கர்த்தருடைய தீர்க்க தரிசியாகிய தானியேல் என்னும் பேர் கொண்ட நீதிமானாகிய ஒரு மனிதன் சிறை கைதியாய் கொண்டு போகப்பட்டான் என்று காண்கிறோம். அவன் நேபுகாத்நேச்சாரின் ஆட்சிகாலத்தில் வானசாஸ்திரிகள் (astrologers) போன்றோருக்கும், ஞானிகள், சாஸ்திரிகள் (the Magi) போன்ற எல்லாருக்கும் அதிபதியாக (prince) விளங்கினான். 16. இப்பொழுது, பெல்ஷாத்சார் ஆட்சியை எடுத்துக் கொண்டான். பெல்ஷாத்சார் ஒரு பொல்லாங்கான மனிதனாக இருந்தான். அவன் எதற்கும் கவலைப்படுவதில்லை . 17. மேலும், பாபிலோன் ஜனங்கள் எல்லாரும் தாங்கள் அப்படிப் பட்டதான ஒரு பாதுகாப்பிற்குள் இருப்பதாக உணர்ந்தார்கள், அதாவது ஒரு முறை கதவுகளுக்கு உள்ளே வந்து விட்டு, அந்த கதவுகள் மூடப்பட்டுவிட்டால், அதாவது 200 அடி உயரமும், 80 அடி அகலமும் உள்ள மதில்களுக்குள் வந்து விட்டால்... அந்த ஜனங்கள், அந்த மதில்களுக்குள் எப்பேர்ப்பட்டதான ஒரு பாதுகாப்பை உண்ர்ந்திருப்பார்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். 18. ஆனால், இதை நினைவில் வையுங்கள். விஞ்ஞானம் உன்னை எவ்வளவு தான் பாதுகாப்புக்குள் வைத்திருந்தாலும் சரி, நீ பாவம் செய்யும் போது தேவன் உன்னை கண்டுபிடித்து விடுவார். ஒரே ஒரு பாதுகாப்புதான் இருக்கிறது, அது கிறிஸ்து இயேசுவுக்கு உள்ளாக மாத்திரமே. 19. இப்பொழுது, இன்றைக்கு நாம் ஜீவிக்கின்றதான இதே மாதிரியான நவீன நாகரீகம் கொண்ட, இந்த மிகைப்படுத்தப் பட்ட (fabulous) அமெரிக்காவைப்போல, உலகின் முன்னேற்றம் அடைந்த தேசமாக இருப்பதின் மிகப்பெரிய முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாய் அவர்கள் இருந்தார்கள். எனக்கு ஏதோ ஒரு விதகலக்கமாய் உள்ளது, அவர்களையொத்த அதே வித மனப்பான்மையை நாமும் உடையவர்களாய் இருக்கின்றோமோ என்ற பயம் வருகிறது. மிக சிறந்த விஞ்ஞானிகள், மிக சிறந்த இயந்திர துப்பாக்கிகள், அணுகுண்டுகள், மிக வேகமாக செல்லக் கூடிய ஆகாய விமானங்கள் இவைகள் எல்லாம் இருக்கின்ற படியினாலும், உலகத்தின் முன்னேற்றமான தேசமாய் இருக்கின்றபடியினாலும், தேவன் இல்லாமலேயே எப்படியோ நமக்கு ஒரு பெரிய பாதுகாப்பு இருக்கிறதென்று நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். 20. அது மிகவும் ஒரு அழகான மாதிரியாய் (pattern) இருக்கிறது. தேவன் மாறுவது கிடையாது. பாவத்தின் மீது அவருக்கு இருந்த மனோபாவம், அன்றைக்கு இருந்தது போன்றே இன்றைக்கும் இருக்கிறது. இங்கே கீழே எந்த விதமான ஒளிப்பிடமும் கிடையாது. கிறிஸ்துவுக்குள் மட்டுமே நீ பாதுகாவலாய் இருக்கிறாய். 21. இந்த மகாப்பெரிய பட்டணத்தில் இருந்தவர்கள், ஒரு பெரிய சேனையாய் வந்து இந்த பட்டணத்தை எதிர்க்க, இந்த உலகத்திலேயே எந்த விதமான வழியும் இல்லை என்பதாக உணர்ந்தார்கள். மகா பெரிதும் உயரமுமான மதில்கள், நவீன ஆயுதங்கள் போன்றவைகளால் அவர்கள் வெளி உலகத்தினின்று பிரிக்கப்பட்டவர்களாய் இருந்தனர். மிகவும் கெட்ட தேசமாகிய மேதிய, பெர்சிய தேசத்தாரும், தற்போதைய இந்தியாவிலுள்ள இந்துக்களாகவும் இருக்கிற அவர்கள், எத்தனையோ மைல்களுக்கு அப்பால் நதிக்கரையில் வாய்க்கால்களைத் தோண்டி, யூப்ரடிஸ் நதியை திசைத்திருப்பி, அதன் வழியாக மதில்களுக்கு அடியில் நுழைந்து வருவார்கள் என்பதை அவர்கள் சிறிதும் அறியாதிருந்தார்கள். அவர்கள் பத்திரமாய் இருக்கிறோம் என்று உணர்ந்த போது இப்படியாயிற்று, எல்லா நேரத்திலும் அவர்கள் அவ்விதமே உணர்ந்தார்கள். அவர்கள் அந்த விதமாக உணர்ந்திருப்பார்களானால்... பின்னர் அவர்கள் பாவத்திற்குள் கஷ்டப்பட்டு நடந்து போனார்கள் (wading in sin). 22. சுய தேவையை சந்திக்கக் கூடிய நிலைமை தனக்கு உண்டு என்று உணருகின்ற ஒரு ஸ்தானத்துக்கு ஒரு மனிதன் வரும் பொழுது, அப்போது தான் பாவம் அவனைப் பற்றிப் பிடிக்க ஆரம்பிக்கிறது என்பது போல் தோன்றுகிறது. ஒரு சபையோ, தேசமோ, தனிப்பட்ட நபரோ புறம்பே இருந்து தனக்கு ஒரு உதவியும் தேவையில்லை என்று உணரும் வேளையில், பாவம் அவனை ஆள ஆரம்பிக்கின்றது. அது உண்மை . ஜனங்களுக்கு ஓர் மேன்மையான (superior) உணர்வு உண்டாகும் போது வழக்கமாக பாவம் உட்பிரவேசித்து அவர்களை தின்று போடுவதை நாமும் கூட கவனித்துள்ளோம். 23. ஆகவே, அவர்கள் கதவுகளை மூடினபோது தாங்கள் மிகவும் பத்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டார்கள். ஆனால், தேவன் பரலோகத்திலிருந்து கீழே நோக்கி பார்க்கிறார். பாவம் எந்த ஒரு தேசத்திற்கும் ஒரு நிந்தையாய் இருக்கிறது. 24. நமக்குள்ளதான எல்லா பெரிய ஆயுதங்கள், அணுசக்தியினால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள், ஒரு வினாடியில் நூற்றுக் கணக்கான மைல்கள் பறக்கக் கூடிய ஜெட் (jet) விமானங்கள், ஒலியின் வேகத்தையும் கடக்கக் கூடியதுமான இவைகளைப் பற்றி நான் வியக்கிறேன். ஆனால் ஒன்றை மறக்க வேண்டாம். உங்கள் பாவங்கள் உங்களை தொடர்ந்து பிடிக்கும். 25. இந்த நேரத்தில் அவர்கள் கதவை அடைத்திருந்தார்கள். அவர்கள் பாதுகாவலுக்குள் இருந்தபடியால், அவர்கள் விரும்பினவாறு களியாட்டத்துக்குள் (revelry) இருக்க முடியும் என்று எண்ணினார்கள். அவர்கள் ஒரு முன்னணி (leading) தேசமாய் இருந்தனர். மற்ற தேசங்களெல்லாம் விஞ்ஞானத்துக்கும், மற்ற உதவிக்கும் இவர்களை நோக்கிப் பார்க்க வேண்டியதாய் இருந்தது. 26. அப்பேர்ப்பட்டதான ஒரு நேரத்திலே ராஜா தனக்கு ஒரு பெரிய கொண்டாட்டத்தை வைத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணினான். அவன் ஒரு நாளைக் குறித்து, அதிலே ஒரு பெரிய நாட்டியத்தை அல்லது நான் சொல்லுவது போன்று ஒரு நவீன ராக் அண்ட் ரோல் (rock and roll) வைக்க தீர்மானித்திருந்தான்; அதற்கு மேல் ஒன்றும் இல்லை. ஆகவே, அவன் நேரத்தைக் குறித்துக் கொண்டு எல்லா புகழ் பெற்றவர்கள், சேவகர்கள், தளபதிகள் மற்றும் அவனுடைய எல்லா மனைவிகள், வைப்பாட்டிகள் யாவருக்கும் அழைப்பு அனுப்பினான். 27. இப்பொழுது, வைப்பாட்டி என்றால் வெறுமனே ஒரு சட்டப்படியான விபச்சாரி. ஒரு மனிதன் தன்னில் தானே போதுமானவன் என்று உணரும் போது, அவன் கஷ்டப்பட்டு தானாகவே பாவத்துக்குள் நடக்கிறான் அல்லவா? 28. அவன் நடத்த இருக்கும் அந்த ராக்-அண்டு-ரோல் விருந்தில் கலந்து கொள்பவர்களுக்காக அவனுக்கு கிடைக்கக் கூடிய நேர்த்தியான மதுபானங்கள் எல்லாவற்றையும் அவன் வருவித்தான். அவன் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணினான். அவன் பத்திரமாய் இருந்த படியினால், ஒன்றினாலும் அவனை சேதப்படுத்த முடியாது என்று அவன் எண்ணினான். அவன் அரண்மனைக்குப் பின்னால் தோட்டங்களில் ஒன்றில் இந்த பெரிய மதுபான விருந்தை (spree) ஏற்படுத்தி இருந்தான். இப்படி அவர்கள் வெளியே தோட்டத்தில் இருந்தபோது, அது மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டதாய், ஜிகினா தொங்குதிரைகள் போன்ற தோரணங்கள் (tinsel hanging) தொங்கி கொண்டிருக்க, வீரர்களை ஊக்குவிக்க கவர்ச்சி நடன மங்கைகள் (showgirls) மற்றும் அநேக ஸ்தீரிகளையும் அங்கே அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களுடைய பீர் (beer) மற்றும் மது வகைகள்... அது இன்றைய அருமையான நவீன ராக் & ரோல் அமைப்பு போன்று இல்லையென்றால், வேறு ஒன்று எங்கு இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை , சரியாக அது அப்படியே இருந்தது. அவர்கள் எல்லாவற்றையும் ஆயத்தமாய் வைத்து, ஒரு பெரிய கொண்டாட்டமான நேரத்தை உடையதாக்கிக் கொண்டிருந்தனர். 29. அநேக கல்யாணமான பெண்கள் வந்திருந்தார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது. அவர்களுடைய புருஷன்மார்களை, பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளும்படியாய் வீட்டில் விட்டு, அவர்கள் சந்தோஷமாய் இருக்க வெளியே போனார்கள். ஒரு வியாதியாய் உள்ள பிள்ளையை வைத்துக் கொண்டு ஒரு தாயானவள் தரையிலே நடந்துக் கொண்டிருக்க, ஒரு குடித்து வெறித்தப் புருஷன் வெளியே கொண்டாட்டத்திற்கு போகும் செயலைப் போன்ற காரியத்திற்கு நேர்மாறாக அது அமைந்து இருந்தது. இந்த இரண்டுமே ஒத்த செயலே, இதைவிட அது மேல் என்று சொல்ல முடியாது (It's just six of one, and half a dozen of the other). 30. அவர்கள் குடிக்க ஆரம்பித்து, அவர்கள் களிக்க ஆரம்பிப்பதை என்னால் காணமுடிகின்றது. அவர்கள் இசைக்குழுவோடு இசைந்திருப்பார்கள் என்று யூகிக்கிறேன், மேலும் அவர்கள் இசையைக் கொண்டவர்களாய் அந்த சிறிய வாலிபமானவர்கள் ஒருவரையொருவர் சுற்றிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தனர் (swinging one another). அந்த சேவகர்கள் குடித்து வெறித்தும், பெண்களை பிடித்து இழுத்துக் கொண்டும், தங்கள் தலைக்கு மேல் அவர்களை சுற்றி வீசிக்கொண்டும், அவர்களை முத்தமிட்டுக் கொண்டும், நாற்காலியில் தங்கள் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டும், ஆரவார கோஷம் எழுப்பிக் கொண்டும் இருந்தனர். தாங்கள் பத்திரமாய் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். 31. ஓ, அமெரிக்காவே! அந்த குடித்து வெறித்தவர்களையும், அந்த ராக்-அண்டு-ரோல் களியாட்டத்தையும் நோக்கிப் பார்த்த அதே தேவன், இன்றிரவு உன்னை நோக்கிப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். 32. அவர்களுக்கு எப்பேர்ப்பட்டதான ஒரு நேரமாய் இருந்திருக்கும். என்னால் இப்பொழுது யூகிக்க முடிகிறது, அந்த பெல்ஷாத்சார் ராஜா ஒரு நவீன எல்விஸ் பிரிஸ்லே-யாக (எல்விஸ் ஆரோன் பிரிஸ்லே - ஒரு அமெரிக்க நடிகனும், பாடகனும், “ராக்&ரோல்-ன் மன்னன்" எனவும் அழைக்கப்படுபவன்-Ed) இருந்திருப்பான். அவர்களுக்கு இருந்ததான விநோதமான கோமாளித்தனமான காரியங்களை அதிகமாய் செய்திருப்பான். இப்படியாய் எல்லாருமாக தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர். ஆனால், மரணமானது வாசலில் படுத்துக் கொண்டிருப்பதை சற்றும் அறியாதவர்களாய் இருந்தனர். 33. ஆக விருந்தும், களியாட்டமும் மும்முரமாய் போன போது, ஒரு பிரமாண்டமான நவீன ஹாலிவுட் அமைப்பின் ஒளிபரப்பில் உள்ள வழக்கமான காரியங்களைப் போன்று, அவர்கள் மதத்தைக் குறித்து, நல்ல விகடமாய்ப் (jokes) பேசலாம் என்று நினைத்தார்கள். ஆர்தர் காட்ஃப்ரே-வின் (Arthur Godfrey- தொலைக் காட்சி மற்றும் வானொலியில் புகழ்பெற்ற ‘நிகழ்ச்சி நடத்துபவர்' - Ed) தொகுப்புகள் அல்லது அது போன்ற தற்கால நவீன நிகழ்ச்சிகள் அல்லது எர்னி ஃபோர்ட்-ன் (Ernie Ford - ஒரு அமெரிக்க நடிகன், பாப் மற்றும் சுவிசேஷ பாடல்களை இயற்றியவன் - Ed) சில காரியங்கள், பிரசிங்கிமாரைக் குறித்து விகடமாய் சொல்வது போன்ற காரியங்களை செய்ய விழைந்தனர். ஆனால், தேவன் இன்னமும் பரலோகத்திலிருந்து கீழே பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் ஒருவரும் தொடமுடியாத ஒரு தேசத்துக்குள் ஜீவித்துக் கொண்டு இருக்கிறோம் என்று எண்ணினார்கள். ஆனால், எதை விதைக்கிறாயோ, அதையே அறுப்பாய். ஜனங்களே, அதைக் குறித்து சற்று எச்சரிக்கையாய் இருங்கள். 34. நீங்கள் ஒரு தேசமாய் இருந்தாலும் சரி, ஒரு சபையாக இருந்தாலும் சரி அல்லது ஒரு தனிப்பட்ட நபராய் இருந்தாலும் சரி, நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுப்பாய். 35. அந்த ராஜா எழும்பி நின்று, “ஒரு நிமிடம்-! பெண்களே, பிரசங்கிமார்களைப் பற்றின மத ரீதியான நகைச் சுவைகளைக் நாம் கேட்போம்,” அல்லது அது போன்ற ஒன்றை அவன் சொல்லுகிறதை என்னால் காண முடிகிறது. பறந்து கொண்டிருந்த ஜிகினா தொங்கல்களில், ஆர்வமாக அந்த வாலிப பெண்கள், "ஊஊப்ப்பி....! ஆம், நான் அவைகளை கேட்க விரும்பிகிறேன்,” என்றார்கள். 36. அந்த இளைமையான போர் சேவர்களெல்லாம் இன்றைக்கு உள்ள வாலிப பையன்கள் போன்று நடந்து கொண்டார்கள். ஏனெனில், இது ஒரு நவீன பாபிலோனேயன்றி வேறொன்றும் இல்லை. அந்நேரத்தில் தானியேல் பாபிலோனில் இருந்த அதே விதமாகத் தான், நானும் ஒரு அமெரிக்கனாக இருக்கிறேன். ஆனால், அது பாவத்தை மன்னிக்காது. 37. ஒரு முறை ஒரு பெண்ணிடம், “நீ கிறிஸ்தவளா-?” என்று கேட்டேன். அவள், “நீர் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் சொல்லுகிறேன், நான் ஒரு அமெரிக்கன்” என்று சொன்னாள். நான், “அதில் எந்த காரியமும் இல்லை,” என்றேன். எப்பொழுதுமே இல்லை 38. நான் அமெரிக்கனாய் இருப்பதனால் சந்தோஷப்படுகிறேன், ஆனால், அதில் கிறிஸ்துவத்தை பிரதிபலிப்பதில் எந்த காரியமும் இல்லை, ஒரு காரியம் கூட இல்லை. நாம் பாவம் செய்வோமானால், அதற்குண்டான கிரயத்தை நாம் செலுத்தப் போகிறோம். இதுவே உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. 39. அவர்களுக்கு அங்கே ஒரு தீக்கதரிசி இருந்தான், ஆனால், அவனுக்கு அவர்கள் செவி கொடுக்கவில்லை. அவர்கள் செய்தியை பெற்றிருந்தார்கள், ஆனால், அவர்கள் அதைக் குறித்து கேலி பரியாசம் செய்ய விரும்பினர். 40. அது நவீன அமெரிக்காவாய் இல்லையென்றால், அது வேறு என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் சுவிஷேசத்தையும், சத்தியத்தையும் பெற்றிருந்தார்கள், ஆனால், அவர்கள் அதைக் குறித்து கேலி பரியாசம் செய்ய விரும்பினர். 41. ஆகவே, அவர்கள், "நாம் கீழே போய் அந்த பரிசுத்த உருளைகளின் பாத்திரங்களை இங்கே மேலே கொண்டு வந்து, அவைகளைக் கொண்டு ஒரு நல்ல 'தமாஷ்' (வேடிக்கை) பண்ணுவோம்,'' என்றார்கள். - தானி 5:2 42. தேவனுடைய பிள்ளைகளை பாவிகள் பரியாசம் செய்ய தேவன் அனுமதிக்கிறதில்லை. என்றாவது ஒரு நாள் நீங்கள் அதற்கு கிரயம் செலுத்துவீர்கள். 43. அவர்கள் போய் கர்த்தருடைய பாத்திரங்களை எடுத்து, அவைகளை கோவிலுக்குள் கொண்டு வந்து, கர்த்தருடைய பாத்திரத்தில் மதுபானத்தை ஊற்றி குடிக்க விழைந்தார்கள். அவர்கள் அவர்களுடைய ஓர்டல்ஸ்-92 (Ortel's-92) மதுவையும் அல்லது ஃபேஸ்ட் புளூ ரிப்பன் (Pabst Blue Ribbon) மதுவையும், நல்ல வேடிக்கையாய் இருக்கும்படி அதற்குள் ஊற்றி, ஓ, அந்த கண்ணாடிகளையும் பாத்திரங்களையும் நிரப்பி (tipped), பின்னர் அதைக் குடிக்க ஆரம்பித்து, குதூகலித்து, கர்த்தருடைய மார்க்கத்தை கேலி செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் செய்கிறது என்னவென்று அறியாதவர்களாயிருந்தனர். 44. இன்றிரவு, இந்த தேசமும் அவ்வாறே இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் செய்தியையும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும், மறுபடியுமாய் பிறக்கும் அனுபவத்தை யும் புறக்கணிப்பதை அறியாதிருக்கிறார்கள். 45. அவர்கள் மத நம்பிக்கை உள்ளவர்களாய் இருந்ததாலும் இப்பொழுது அந்த ராக் & ரோல் களிப்பில் குடித்து வெறித்திருந்தாலும், அவர்கள் மத நம்பிக்கை உள்ளவர்களாய் இருந்தார்கள். ஏனென்றால், வேதம், "அவர்களுடைய தேவர்களைப் புகழ்ந்தார்கள்” என்று கூறுகிறது. 46. ஆகவே, நீங்கள் அதிக பக்தி உள்ளவர்களாய் இருந்து கொண்டும், இன்னமும் தவறாய் இருக்கலாம்-! அது சரி. மன உத்தமம் ஒரு காரியமல்ல. "மனுஷனுக்கு செம்மையாய் தோன்றுகின்ற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.'' ஆகவே, அவர்களுக்கு ஒரு பெரிய மாகாண சபை இருந்தது, அவர்கள் சேவிக்க தக்கதான மதம் இருந்தது. அவர்கள் தேவனுடைய பரிசுத்த காரியங்களைக் குறித்து பரியாசம் செய்தனர். 47. அது சரியாக, தேவனுடைய பரிசுத்த காரியங்களைப் பரியாசம் செய்கின்ற இன்றைய வழக்கத்திற்கு ஒத்ததாய் இருக்கிறது. சுத்தமுள்ளதாய், மரியாதையாய், நேர்மையாய் ஜீவிக்க முயற்சிக்கிற ஜனங்களை அவர்கள், 'பழைய நாகரீகம்', 'பரிசுத்த உருளை' அல்லது வேறு ஏதோ அவதூறான பெயர்களை சொல்லி அவர்களை அழைக்கிறார்கள். தேவன் கிரியை நடப்பிக்கின்றதான அவருடைய வரங்களை அவர்கள், "ஒரு குறி சொல்லுதல் அல்லது அசுத்த ஆவியின் கிரியை அல்லது பிசாசு” என்று சொல்லுகிறார்கள். ஓ!.... உன்னால் எப்படி நியாயத்தீர்ப்பில் தப்பிக்க முடியும்? இரத்த சாட்சிகளின் இரத்தம் அதற்கெதிராய் கூக்குரலிடுகிறது. தேவன் இந்த தேசத்தை அவர்களின் நவீன பாவங்களுக்காக நியாயம் தீர்க்கவில்லையென்றால், அவர் சோதோமையும் கொமாராவையும் எழுப்பி, அவர்களை அழித்ததற்க்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டி இருக்கும். அது உண்மை. நாம் நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டு இருக்கிறோம்! நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்டதான இரட்சகர் செய்கிறதாக நீங்கள் காண்கிற இந்த மகத்தான அற்புதங்கள், நியாயத்தீர்ப்பு சமீபமாய் இருக்கிறதென்பதற்கு எச்சரிப்பின் அடையாளமாய் இருக்கின்றன. அவைகள் இந்த தேசத்தின் இந்த பக்கத்திலிருந்து, அந்த பக்கத்திற்கும், கிழக்கிலிருந்து மேற்குக்கும், வடக்கிலிருந்து தெற்குக்குமாக ஊடுருவியுள்ளது (combed). அவர்கள் அதை வேண்டாமென்று தள்ளி, அதை பரிகசித்து, அவர்களுடைய ஏடுகளில் 'அர்த்தமற்றது' என்று எழுதினார்கள். நவீன பாபிலோனே-! அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பார். 48. குடித்துக் கொண்டும், குவளைகளை நிறைத்துக் கொண்டும் அவர்கள் இருக்கும் போது, சடுதியில், இந்த பெரிய சினிமா ப்ளேபாய், (playboy) பெல்ஷாத்சார் என்று அழைக்கப்படுபவன், அவனுடைய கோப்பையிலிருந்து குடிக்க ஆயத்தமாய் இருந்த போது, அவன் திரும்பி அரண்மனை பக்கமாக நோக்கி பார்த்த போது, அவனுடைய கண்கள் பிதுங்கி வெளியே வருவதைப் போலிருந்தது. ஏனென்றால், பரலோகத்திலிருந்து ஒரு மனிதனின் கரம் போன்று ஒன்று வருகிறதையும், அது சுவற்றின் மீது மேலும் கீழுமாக எழுத ஆரம்பித்ததையும் கண்டான். 49. நீங்கள் இதை கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அது ஒரு பூசப்பட்ட சுவற்றின் மீது எழுதினது. ஒருக்கால், அந்த நவீன ராக் & ரோல் நடந்து கொண்டிருந்த இடத்தில், தொங்கல்களின் ஊடாக மெழுகுவர்த்தி விளக்குகளின் வெளிச்சமானது அந்த சுவற்றின் மேல் பிரகாசித்துக் கொண்டு இருந்திருக்கும். தேவன் காரியங்களை ஏதோ ஒரு மூலையில் செய்கிறவர் அல்ல. அது நேராக, வெளிச்சத்திற்கு கீழாக, அங்கே தான் தேவன் பேசவும் அசையவும் செய்கிறார். ஆகவே, அவருடைய இயற்கைக்கு மேம்பட்ட கையெழுத்து, அந்த பூசப்பட்ட சுவற்றின் மேலே, அவர்கள் யாவரின் முன்னிலையிலும் எழுதப்பட்டது. 50. அந்த நவீன விகடகவி, நல்ல வானொலி நகைச் சுவையாளர், தொலைக்காட்சி நடிகனான அந்த ராஜா தான் முதலாவதாக அதை பார்த்திருக்க வேண்டும். குடிப்பதற்கு அவனுடைய பாத்திரங்கள் நிரப்பப்பட்டு, அதை அவன் கைகளில் வைத்து உள்ளவனாய், அவன் கண்கள் பிதுங்கிவர எல்லாம் ஆடுவது போல் உணர்ந்தான். அவன் அப்படி செய்தான் என நான் யூகிக்கிறேன். "அவனுடைய எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது” என்று வேதம் கூறினது. அவன் நிச்சயமாக பதறிப் போய் ஆட்டங்கண்டிருப்பான். தேவன் தம்முடைய அடையாளங்களை காண்பிக்க துவங்கினால், உங்களை அசைக்க கூடிய நேரம் அதுவே. அவன் அதை கவனித்த மாத்திரத்தில், அவனுடைய ராக் & ரோல் பாடல்கள் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 51. பின்னர் அவன் அந்த சுவற்றின் மீதுள்ள கையெழுத்தைக் கவனித்தப் போது, நான் யூகிக்கிறேன், அதாவது, உதட்டுச் சாயம் பூசிக் கொண்டு, அதைப் போன்று.... எனக்கு அதைச் சொல்லத் தெரியவில்லை, தலைமயிர் முற்றிலும் தொங்கிக் கொண்டும், சுருள் சுருளாக சுற்றிலும் அசைந்து கொண்டும், இந்த விதமாக இருந்த அந்த இளம்பெண், குடித்து வெறித்திருந்த அந்த போர் சேவகர்களிடம், தொண்டை விக்கினவளாய் (hiccuped) "இன்றிரவு, இந்த பையனுக்கு (ராஜா) என்னவாயிற்று என்று வியக்கிறேன்!” என்று சொன்னாள். 52. யாரோ ஒரு வாலிபன் அவளை பிடித்து இழுத்து, “அது இருக்கட்டும், அடுத்ததாக நாம் இருவரும் நடனமாடுவோம்” என்றான். இன்னிசை நின்று போயிற்று. 53. ஓ... பாவம் நிறைந்த இந்த பெரிய தேசமே, ஒரு நாள் உன்னுடைய ராக் & ரோல் நிறுத்தப்படப் போகின்றது. ஒரு பிரசங்கியாரின் சத்தத்தை நீ கவனியாமல் போவாயானால், என்றோ ஒரு நாள் நியாயத்தீர்ப்பில் தேவனுடைய கரத்தை நீ கவனிக்க வேண்டியிருக்கும். ராக் & ரோல் இசைகள் நிறுத்தப்பட்டு, அந்த டைட்டானிக் கப்பலின் வாத்தியக் குழுவினர் செய்தது போன்று, தங்கள் இசையை மாற்றி, “உம் அண்டை தேவனே, நான் சேரட்டும்!" என்ற பாடலை இறுதியாக அவர்கள் இசைத்தது போன்று நடக்கும். என்றாவது ஒரு நாள் நீ அந்த இசையை மாற்றத்தான் போகிறாய். 54. இன்னிசை நிறுத்தப்பட்டது. அவர்கள், அவர்களுடைய நகைச்சுவையாளர்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி நட்சத்திரங்களையும் கவனித்தார்கள். ஆனால், அங்கே அவன் நின்று கொண்டு, அந்த மகத்தான காரியம் நடைபெறுவதைக் காண்கையில், அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருக்கிறதைக் அவர்கள் கவனித்தார்கள். அவன், "ஏன்? சுற்றியுள்ள எல்லா மதில்களும் அடைக்கப்பட்டு இருக்கின்றதே. நான் தெரிந்தெடுத்த என்னுடைய காவற் காரர்கள் வாசலைக் காத்துக் கொண்டிருக்கின்றனரே” என்றான். 55. ஆனால் பாருங்கள், நீங்கள் நினைக்கின்ற படி கதவு வழியாய் தேவன் உள்ளே வர வேண்டிய அவசியமில்லை. அவர் மகிமையிலிருந்து கீழே இறங்கி வருகிறார்-! அவருடைய கரம் இந்த சுவற்றின் மீது எழுதிக் கொண்டிருந்தது. 56. மிக நவீனமான ஒரு ஸ்தலத்தில் இருந்ததால், வேதம் சொல்லுகிறது, துரிதமாக அவன் தன்னுடைய எல்லா குறி சொல்லுகிறவர்களையும், ஜோசியர்களையும், எல்லா பேராயர்களையும், பட்டதாரிகள் மற்றும் போப்புகள், கார்டினல் இப்படியாக யாவரையும் அழைப்பித்தான். அவன், ''பண்புள்ள மனிதர்களே!, இப்பொழுது நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நீங்கள் உபதேசிக்கவும், நீங்கள் செய்ய விரும்பின காரியங்கள் யாவையும் செய்யவும் படியாய் உங்களுக்கு நான் சிலாக்கியம் கொடுத்தேன். இப்பொழுது, இந்த சுவற்றின் மீது எழுதப்பட்டவைகளை எனக்காக வியாக்கியானம் செய்து கொடுங்கள்'' என்று சொன்னான். 57. சரியாக அன்றைக்கு உள்ளது போன்றே இன்றைக்கும் உள்ளது. இயற்கைக்கு மேம்பட்டதில் அவர்களுக்கு பழக்கமில்லை. அதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அறியாத பாஷையை எப்படி வியாக்கியானிப்பது என்பது அவர்களுக்கு தெரியாத காரியமாய் இருந்தது. பரலோக பாஷையைக் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் வாயடைத்துப் போனவர்களாய் காணப்பட்டனர். அதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் வெறுமனே நின்று கொண்டிருந்த நிலையில் .... 58. நினைவிருக்கட்டும், இது புறஜாதி ராஜ்ஜியத்தை உள்ளே கொண்டு வருகிறதாயிருக்கிறது. அது இயற்கைக்கு மேம்பட்ட காரியத்தின் கீழே நுழைந்தது போன்று, இயற்கைக்கு மேம்பட்ட காரியத்தின் கீழே அது வெளியேறும். 59. ஆனால், இந்த பேராயர்களும், கார்டினல்களும், பெரிய பட்டதாரிகளும், இந்த இயற்கைக்கு மேம்பட்டதை வியாக்கி யானிக்கக் கூடாமல் போயிற்று. அதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. அவர்களுடைய இலக்கிய கலைப் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து போது, அதற்கு ஒப்பனையாக ஒன்றையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பாருங்கள், ஆவிக்குரிய காரியங்களை ஆவிக்குரிய பிரகாரமாய் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் யாவருக்கும் கலக்கம் உண்டாகியது, அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . 60. முடிவிலே, ஒரு சிறு ராணி, நினைவிருக்கட்டும், அவள் அந்த ராக் & ரோல் விருந்தில் இல்லை. ஏதோ ஒரு காரியம் சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்று அவள் அறிந்திருக்க உண்டான ஒரே வழி, ராஜா அப்படியே வெலவெலத்துப் போய், களியாட்ட விருந்துகள் எல்லாம் நிறுத்தப்பட்டது என்று அவளுக்கு செய்தி வந்ததன் மூலமே. அவள் நல்ல விசுவாசிகளில் ஒருவராய் இருந்திருக்கலாம். எப்படியாயிருந்தாலும், மறக்கப்படாத ஒருவளாய் அவள் அங்கே இருந்தாள். 61. அவள் விருந்து சாலைக்குள் நுழைந்தாள். அந்த நவீன விகடகவி மற்றும் அந்த இசைக்குழு முழுதும் செயலற்றுப் போய் நிற்பதைக் கண்டவளாய் அவள், "ஓ ராஜாவே! நீர் என்றென்றைக்குமாய் வாழ்க," என்று சொன்னாள். ஆனால் சரியாக அங்கே அவன் மரித்தவனாய் காணப்பட்டான் என்பதை அவள் அறியாதிருந்தாள். அவளோ, "என்றென்றைக்குமாய் வாழ்க!'' என்றாள். மேலும் அவள், "அந்த சுவற்றின் மீது எழுதப் பட்ட கையெழுத்தைக் குறித்து நீர் கலங்கிப் போயிருக்கிறீர் என்று நானறிவேன். பேராயர்களும், போப்புகளும், கார்டினல்களும், வேதாகமக் கல்லூரியில் டாக்டர் பட்டம் (doctors of divinity) பெற்றவர்களும், வேரொறுவரும் அதை படிக்க முடியவில்லை என்பதை நான் அறிவேன். ஆனாலும் ராஜாவே, நான் ஒரு காரியத்தை உமக்கு சொல்கிறேன். இயற்கைக்கு மேம்பட்டதை குறித்து அறிந்த ஒரு மனிதன் உம்முடைய ராஜ்ஜியத்தில் இருக்கிறான்,” என்று சொன்னாள். 62. ஓ, சகோதரனே-! நாம் சுவற்றின் மீது உள்ள கையெழுத்தை பார்க்கும் பொழுது, இன்றைக்கு , அதைக் குறித்து அறிந்த ஒரு மனிதன் இருக்கிறார். இந்த பட்டணத்திலுள்ள எல்லா மருத்துவர்களிடத்திற்கும் நீங்கள் போயிருக்கலாம். ''நீ மரிக்கத் தான் வேண்டும்'' என்று அவர்கள் சொல்லியிருக்கலாம். ஆனால், அங்கே ஒரு மனிதன் இருக்கிறார்-! கறைபடிந்த நரகத்தின் சுவர்களைப் போன்று, உன் ஆத்துமா கருத்துப்போகும் அளவிற்கு நீ பாவத்திற்குள் நடந்து போயிருக்கலாம். நம்பிக்கையற்ற நிலைமையில் தற்கொலை செய்து கொள்ள நீ ஆயத்தமாய் இருக்கலாம். ஆனால், அங்கே ஒரு மனிதன் இருக்கிறார். அவர் பெயர் இயேசு. இயற்கைக்கு மேம்பட்டதை அவர் அறிவார். அவர் நம்முடைய ராஜ்ஜியத்தில் இருக்கிறார். ஏனென்றால், நாம் அவருடைய ராஜ்ஜியத்தின் பிள்ளைகளாய் இருக்கிறோம். அங்கே ஒரு மனிதன் இருக்கிறார்! 63. அவள், “இயற்கைக்கு மேம்பட்டதை அவர் அறிவார். சில வருடங்களுக்கு முன்னர் அவனுக்குள் தேவனுடைய ஆவி இருக்கிறதென்று கண்டறிந்தார்கள். மிகவும் அருமையான ஆவியை அவன் உடையவனாயிருந்தான். அவனால் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்ல முடியும். தரிசனங்களைக் அவன் கண்டான், அவைகள் ஒவ்வொன்றும் மிகச் சரியாக அப்படியே இருந்தது. ஆகவே, நீர் கலங்க வேண்டாம். எனக்கு சற்று நேரம் கொடுப்பீரானால், நான் அவனை இங்கே அழைத்து வருவேன்,” என்றாள். 64. நீ அவரை அழைக்கும் ஒரு நாள் வரும். ஒருக்கால் உன்னுடைய வீட்டில் நீ அவருக்கு இடம் கொடுக்க முடியாமல் இருக்கலாம். தொலைக்காட்சி பார்ப்பதிலும், பீர் அருந்துவதிலும், சீட்டு விளையாடுவதிலும், ராக் & ரோல் விடுதிக்குப் போவதிலும் நீ அதிக மும்முரமாய் இருக்கலாம். ஆனாலும், நீ அவரை கூப்பிடக் கூடிய நேரம் ஒன்று உண்டு-! அது சரியே. 65. ஆகவே, தானியேல் உள்ளே கொண்டு வரப்பட்டான். அவன் உள்ளே கொண்டு வரப்படும் போது... நீதியைப் பிரசிங்கிக்கிற ஒருவன், ஒரு தேவனுடைய மனிதன்-! அப்பேர்ப்பட்டதான ஒரு இடத்தில், ஒரு தேவனுடைய மனிதன் ஜீவிப்பதைப் பற்றி என்னால் யூகித்துக் கூட பார்க்க முடியவில்லை, அதற்கெதிராக அவன் வெளியே அழைக்கப்படாத வரை. ஆனால், பாருங்கள், அந்த ராஜா அதற்கு எந்த கவனமும் செலுத்தவில்லை. அவன் அந்த நிலைமைக்குள்ளாக இப்போது இருப்பதன் காரணம் அது தான். 66. அவர்கள் தானியேலைக் கொண்டு வந்தனர். அவன், ''ஏன் உன்னுடைய போப்புகளும், பட்டதாரிகளும் உனக்கு வியாக்கியானம் அளிக்க இயலவில்லை-?” என்றான். அதை வியாக்கியானிக்க அவர்களிடத்தில் ஒன்றுமே இல்லை. 67. அதன் பின்னர் என்ன சம்பவித்தது-? தானியேல், “ஓ.... பெல்ஷாத்சாரே, இந்த காரியங்களெல்லாம் உமக்கு தெரியும். இவைகள் உமக்கு மறைக்கப்படவில்லையே" என்று சொன்னான். 68. நான் அமெரிக்காவுக்கு கூறுகிறேன்-! இந்த நிமிஷம் அவர்களை என்னுடைய சத்தத்திற்கு செவி கொடுக்க செய்வேனேயானால் நலமாயிருக்கும் என வாஞ்சிக்கிறேன். இந்த காரியங்களெல்லாம் நீங்கள் அறியாதவைகளல்லவே. தேசங்கள், நாம் செய்தவாறே, முன்பு பாவம் செய்து. நாம் தராசிலே நிறுக்கப்பட்டு குறைய காணப்பட்டோம். பிரான்சுக்கு என்ன நேர்ந்தது? ஜெர்மனிக்கு என்ன நேர்ந்தது-? மதுபானம், பெண்கள், பெரிய கொண்டாட்டம் (big time) என்பவைகள் பின்னே சென்ற மற்ற தேசங்களுக்கு என்ன நேர்ந்தது-? அது எப்பொழுதும் அவ்விதமாகவே வருகிறது. நாமும் நியாயத்தீர்ப்புக்கு தவிர்க்கப் பட்டவர்கள் அல்லவே. தேவன் நீதியுள்ளவர். 69. அவன், “உம்முடைய தகப்பனார், எப்படி தேவன் மகாப் பெரிய தேசத்தை அவருக்கு கொடுத்தார்-? ஆனால் அதை எல்லாம் அவர் மறந்து போனார். நீர் செய்து கொண்டிருக்கிற அதே காரியங்களை அவரும் செய்தார். தேவன் அவரை ஒரு காட்டு மிருத்தைப் போல மாற்றினார். இந்த காரியங்களை எல்லாம் நீர் அறிந்திருந்தும், பரிசுத்த பாத்திரங்களை நீர் எடுத்து அவைகளை பரியாசம் செய்தீர்,” என்றான். கவனியுங்கள், மேலும் அவன், “இந்த கையெழுத்து சுவற்றின் மீது எழுதப்பட்டாயிற்று. உன்னுடைய ராஜ்ஜியம் மட்டிட்டது (numbered).'' வேறு வார்த்தையில் சொன்னால், “இங்கே பாரடா, உன்னுடைய நாட்கள் எண்ணப்பட்டாயிற்று, உன்னுடைய ராஜ்யபாரமானது எடுக்கப்பட்டு, கொடுமை மிக்க (brutal), அவ்வளவு தேவனற்ற இன்னொரு தேசத்திற்கு கொடுக்கப்பட்டாயிற்று." அவர்களைப் போல மோசமான தேசம். தேவன், பாவத்தை பாவத்தோடு யுத்தம் பண்ணும்படி செய்கிறார். இன்றைக்கு நான் ஆச்சரியப்படுகிறேன்-! 70. சரியாக அதே நேரத்தில், நான் முதலாவதாக இதைச் சொல்லட்டும். அவன் அங்கே நின்று கொண்டு, அந்த சுவற்றின் மேல் எழுதப்பட்டதைக் கவனித்துக் கொண்டிருக்கும் போது, அப்பொழுதே, அங்கே கதவுக்கடியில், வாயில் காப்போன்கள் கொலை செய்யப்பட்டாயிற்று என்பதை சிறிதும் அறியாத வனாயிருந்தான். போர் வீரர்கள் வீதியில் இருந்து கொண்டு, அரண்மனை காவற்காரர்களைக் கொன்று கொண்டிருந்தார்கள். அவர்கள் படிகளில் வந்து கொண்டிருந்தனர். தங்கள் பிள்ளைகளையும், புருஷன்மார்களையும் விட்டு விட்டு வந்திருந்த அந்த ஸ்திரீகள் அங்கே நின்று கொண்டிருந்தனர், மனைவிகளை விட்டு விட்டு வந்திருந்த ஆண்கள், குடித்து வெறித்து, ஏதோ நவீன நடனத்தைப் பார்த்துக் கொண்டு நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தனர். போர் சேவகர்கள் ஏற்கனவே படிகளிலே வழியில் வந்து கொண்டிருந்தனர்; இன்னும் சில நிமிடங்களுக்குள் ராஜா சங்கரிக்கப்பட போகிறார். அங்கே குடித்து வெறித்திருந்த ஆண்கள் கூட்டம் அனைத்தும், தேவ நம்பிக்கையற்ற, பிசாசு பிடித்த தேசத்தாரால் சங்காரம் பண்ணப்படப் போகிறார்கள். பெண்களோ நிர்வாணம் ஆக்கப்பட்டு, வாலிபப்பெண்கள் வீதிகளிலே அவமானப் படுத்தப்பட்டு, பின்னர் கால்களைப்பிடித்து தூக்கி, தலையிலே சுவற்றிலே மோதி அடிக்கப்படுவார்கள். புத்தி பிசகான, குடித்து வெறித்த போர்ச் சேவகர்கள் தங்கள் காமவெறியை அவர்களோடு தீர்த்த பின்பு, அவர்களை வெட்டி போடுவார்கள். இவையெல்லாம் அங்கே கதவண்டை நடந்து கொண்டிருந்தது, ஏனென்றால் அவர்கள் தராசிலே நிறுக்கப்பட்டு குறைய காணப்பட்டார்கள். 71. நான் ஆச்சரியப்படுகிறேன், இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறதான நம்முடைய நவீனங்கள், தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைகளை கேலி செய்து, சிரித்து, ஜீவிக்கிற தேவனுடைய சபையைப் பார்த்து கேலி செய்து, சிரித்து, “இறுமாப்புள்ளவர்களாயும் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்'' என்று வேதம் கூறுவது போல் செய்கின்றனர். 72. நாம் மிகவும் பத்திரமாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிற இந்த நாளிலே, ரஷ்யா நம்மைவிட விஞ்ஞானத்திலே ஐந்து வருடம் முன்னதாக இருக்கிறதென்று சடுதியாய் கண்டுள்ளது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. 73. நாம் அநேக விருந்துகளில் இருந்துள்ளோம். நாம் அதிகமாய் பாவத்திற்குள் பலவந்தமாய் போயுள்ளோம். சபையானது அவ்வளவு உறக்கத்தில் இருக்கிறது, இனி அது ஜெபக் கூட்டங்களைக் குறித்து கவலைப்படுவதில்லை. அவர்கள் அக்கறை அற்றவர்களாய் இருக்கிறார்கள். ஜீவிக்கிற தேவன் உடைய உண்மையான ஆவிக்கு எதிராக ஒரு சத்தத்தை அவர்கள் எழுப்புகிறார்கள். அவர்கள் அதைப் பெறப் போவதில்லை . அவர்கள் அவ்வளவாக தங்களை ஸ்தாபனமாக்கி, தங்களை அலங்கரித்துக் கொள்ளுகிறார்கள். ஜெபக் கூட்டங்களுக்கு வருவதற்கு அவர்களுக்கு நேரம் கிடையாது. அவர்கள் தொலைக் காட்சிகளிலும், சினிமா கொட்டகையிலும், ஊரைச் சுற்றிக் கொண்டும், மதுபான விருந்துகளுக்கும், மற்ற காரியங்களுக்கும் போகின்றனர். அது உண்மை. 74. ஒருக்கால் அது பண்டைய நாகரீகத்தைப் போலத் தோற்றமளிக்கலாம், ஆனால் இன்றைக்கு தேசத்துக்கு அதுவே தேவையாயிருக்கின்றது. ரப்பர் கையுறைகள் அணிந்து கொள்ளுதல்-அது போல சுவிஷேசத்தை சுற்றி மிக அதிக மிருதுத் தன்மை (sissying around) காணப்படுகிறது. பரிசுத்த ஆவியினால், வெறும் கரங்களால் அது கையாளப்பட வேண்டியுள்ளது. உண்மையாக-! 75. ஓரிரு வாரங்களுக்கு முன்னர், பில்லி கிரஹாம் தன்னுடைய செய்தியில், "ரஷ்யா வாஞ்சிக்கும் எந்த நேரத்திலும், இந்த தேசமானது, ரஷ்யாவுக்கு ஒரு ஒளிபரப்பும் சாதனமாக செயற்கைக்கோளாக (satellite) முடியும்” என்று சொன்னார். நாம் எங்கே இருக்கிறோம்-? 76. நீங்கள் எல்விஸ் பிரெஸ்லியின் ரெக்கார்டுகளை வாங்கிக் கொண்டு, இந்நாட்களில் ஒன்றில், -'நாம் சுசியை நேசிக்கிறோம்'- என்ற அவனுடைய பாடல் இசையை கேட்பதற்காக, சபைக்கு போகாமல் வீட்டிலே தரித்திருப்பீர்கள்.!! நீங்கள் தராசிலே நிறுக்கப்பட்டு குறைய காணப்பட்டீர்கள். என்ன சம்பவித்தது-? அங்கே சுவற்றின் மீது ஒரு கையெழுத்து இருக்கின்றது.! 77. ரஷ்யர்கள் ஒரு 'ஸ்புட்னிக்' என்ற செயற்கைக்கோளை, பூமியிலிருந்து ஐநூறு மைல்களுக்கும் அப்பால் ஏவியுள்ளார்கள். அதின் எந்த ஒரு கருவியையும் நம்மால் கட்டுப்படுத்த இயலாது. அடுத்த முப்பது நிமிடங்களில் அதைப் போன்று ஆறு ‘ஸ்புட்னிக்'களை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மீது பறக்க விட்டு, "சரணாகதி அடையுங்கள், அல்லது சில வினாடிகளில் சாம்பலாகி விடுவீர்கள்'' என்று சொல்லக் கூடும். அவர்களால் அதைச் செய்ய முடியும். அதைச் செய்ய முடியாமல் தடை செய்ய நம்மால் கூடாது. ஒரு இரத்தமில்லாத, இருதயமற்ற, தேவபக்தியற்ற கம்யூனிஸ்ட்கள் கரத்தில் அது இருக்கிறது. அதைத் தான் தேவன், பாவத்தை வெளிச்சத்திற்கு வருவதற்காக உபயோகிக்கிறார், நிச்சயமாக நீங்கள் வேதத்தை வாசிப்பீர்களானால், வெளிப்படுத்தின விசேஷத்தின் படியாய் ரஷ்யா அதை செய்ய வேண்டி உள்ளது. சரி, தீர்க்கதரிசன போதகர்களே ஒருக்கால் நீங்கள் கருத்து வித்தியாசப்படலாம். ஆனால், இவைகளெல்லாம் முடியுமட்டாய் காத்திருங்கள். அந்த நோக்கத்திற்காகத்தான் ரஷ்யா வைக்கப்பட்டுள்ளது. வேதம் அவ்விதமாய் கூறினது. 78. இப்பொழுது இங்கே அவள் ஒரு 'ஸ்புட்னிக்'கோடு நிற்கிறாள். அன்றொரு நாள் நாம் அதைப் போன்ற ஒன்றை அனுப்ப முயற்சித்தோம். அவர்கள் செய்த அளவிற்கே நம்மால் முடியும் என்று நாம் எண்ணினோம். பூமியை விட்டு மூன்றடிகள் மேலெழும்பி, பின்னர் சிதைந்து விட்டது. அதிகப் படியான ராக் & ரோல்களும், பாவங்களும். நாம் தராசிலே நிறுக்கப்பட்டு குறைய காணப்படுகிறோம். தேவனே-! இரக்கமாயிரும். 79. நாம் என்ன செய்யப் போகிறோம்-? அவர்கள் இந்த 'ஸ்புட்னிக்'குள் ஏவுகணைகளை வைத்தனுப்பி, "சரணாகதி அடையுங்கள், அல்லது ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு குவியலாக தூசியாகி விடுவீர்கள்'' என்று சொன்னால் என்ன சம்பவிக்கும்-? நிச்சயமாக, நமது அரசாங்கம் உயிர் மீட்சிக்காக அடி பணியலாம். அவர்களால் செய்ய முடிகிற காரியம் அது மட்டுமே. 80. அப்பொழுது அமெரிக்கராகிய உங்களில் சிலருக்கு என்ன சம்பவிக்கும்-? இங்கிருக்கிற நாம் அனைவரும். இவ்விடத்திள் உள்ளவர்களல்ல, ஆனால் நான் தேசியமாகப் பேசுகிறேனா-? தேசியமாகப் பேசுகிறேன். 81. ரோஜா மொட்டு போன்று உதட்டில் சாயம் பூசிக் கொண்டு சமர்த்தாக செல்லும் பெண்களே-! மூலையில் நின்றுகொண்டு, சுவிஷேசத்தைப் பிரசிங்கிக்கிறவர்களைப் பார்த்து கேலியாக சிரிக்கின்றீர்கள். இருபது வயதுக்குட்பட்ட இளமையானவர்களே-! அடக்கி ஆள உண்டாயிருக்கின்ற அறிவைக் காட்டிலும் உங்களிடம் அதிக துணிவு இருக்கிறதென்று நினைக்கிறீர்கள். 82. வீட்டில் தாயாரோடு உட்கார்ந்து கொண்டு தொலைகாட்சியை பார்த்துக் கொண்டிருக்கிற தகப்பனே-! உனக்கு என்ன சம்பவிக்க போகின்றது? உன்னுடைய மகன் வேறே எங்கோ தேவையில்லாத இடத்தில் இருக்கிறான். சகோதரி எங்கேயோ உணவகத்தில் இருந்து கொண்டு ராக் & ரோல் ஆடிக் கொண்டிருக்கிறாள். நீயோ தொலைகாட்சியை பார்த்துக்கொண்டு சுவிசேஷத்தை பரியாசம் செய்து கொண்டிருக்கிறாய். 83. சபை அங்கதினனே-! உனக்கு என்ன சம்பவிக்க போகின்றது? உங்களுக்கு உண்டாகும் விளைவு என்னவாக இருக்க போகின்றது. எல்லா புத்தகத்திலும் அல்லது பட்டணத்திலுள்ள மிக பெரிதான சபையிலும் உன் பெயர் இருக்கலாம். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் பாதுகாப்பின் கீழ் நீ இல்லையென்றால், அழிந்து போகிறவர்களோடே நீங்களும் அழிந்து போவீர்கள், அங்கே உங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. 84. என்ன சம்பவிக்க போகின்றது? அங்கு மேலாக ஒரு 'ஸ்புட்னிக்' விடப்பட்டிருக்கிறது. என்ன சம்பவிக்கும்-? தேசம் சரணாகதி அடையும் நிச்சயமாக. அரசாங்கம் செய்ய கூடிய மரியாதையான ஒரே காரியம் அது ஒன்று தான். 85. அப்பொழுது என்ன சம்பவிக்கும்-? அலை அலையாய், கப்பல் கப்பலாய் போர் சேவகர்கள் வருவார்கள். அலை அலையாய் விமானங்கள் வந்து இந்த தேசத்தில் இறங்கும். பெண்கள் வீதிகளில் அவமானப்படுத்தப்படுவார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்-? அது அவர்களுக்கு சொந்தமானது. உங்களை வீடுகளிலிருந்து உதைத்து தள்ளி, அதை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். 86. வாலிப பெண்களே-! வாலிப ஆண்களே-! அந்த நேரத்தில் இருக்கப்போகும் உங்களுக்கு என்ன சம்பவிக்கும்? பாவத்தின் கிரயம் செலுத்தப்பட்டாக வேண்டும். அது எந்த தேசமாயினும் கவலையில்லை அல்லது யாராயிருந்தாலும் சரி, அது அதை செய்யத் தான் போகிறது. தனிபட்ட முறையில் அல்லது ஒரு தேசமாக. அதற்கான கிரயத்தை செலுத்த தான் வேண்டும். காட்டு மிராண்டிதனமான, தேவ பக்தியற்ற , கிர்தா (whisker-jawed) வைத்த, கம்யுனிஸ்டு போர் சேவகர்கள் உங்கள் மனைவி களையும், உங்கள் வாலிபப் பெண்களையும் பிடித்து அவமானப் படுத்துவார்கள். அங்கே நின்று கொண்டு, நீங்கள் பார்க்கத்தான் முடியும். அதை குறித்து நீ ஒன்றும் செய்ய முடியாது. 87. இதற்கு காரணம் என்ன-? நீங்கள் அப்படிப்பட்ட காரியங்களான தொலைக்காட்சி, ராக் & ரோல், பாவம் முதலானவைகள், ஏதோ குளிர்ந்துப் போன, இயற்கைக்கு மேம்பட்டதை வியாக்கியானிக்க முடியாத, சாதாரண பிரசங்கியார் சொல்லுகின்றவைகளுக்கு செவி கொடுத்ததினால் தான். கையெழுத்தானது சுவற்றின் மேல் உள்ளது! அது சரியே-! நாம் தராசிலே நிறுக்கப்பட்டு குறைய காணப்பட்டோம். 88. அது எப்பொழுது சம்பவிக்கும்-? காலையில் பொழுது விடிவதற்கு முன்னர். யார் அதை தடை செய்ய முடியும்-? முயற்சி செய்து பார். அப்படியாய் சம்பவிக்கும் என்று வேதம் சொல்லுகிறது. 89. ஆனால், நான் உங்களுக்கு சொல்லட்டும், ஜீவிக்கின்ற தேவனுடைய சபையை அது ஒரு போதும் தொடாது, அந்நேரத்தில் நாம் போய் விட்டிருப்போம். 90. ஆகவே, நண்பர்களே-! செவிகொடுங்கள். சுவற்றின் மீது நாம் கையெழுத்தை பார்க்கிறோம், அந்த காரியமானது அவ்வளவு நெருக்கத்தில் இருக்குமானால், இது சம்பவியாதபடி இப்பொழுது அதைத் தடை செய்ய ஒன்றினாலும் கூடாது. 91. அமெரிக்காவுக்கு பிரசங்கம் பண்ணப்பட்டாயிற்று, இயற்கைக்கு மேம்பட்டது செய்யப்பட்டாயிற்று, தொடர்ந்து அவர்கள் அதின் மேன்மையான காரியத்தினூடாக கடந்து வந்தார்கள். 92. ஒரு நாட்டிற்குப் போய் ஒரு எழுப்புதல் நடத்தி, வாரத்திற்கு 40 பேர் மனமாறினால், 6 வாரங்கள் கழித்து அங்கே போனால் 4 பேர் கூட அங்கு இல்லை. அந்த பழைய குளமானது வலை போட்டு எல்லாம் எடுக்கப்பட்டாயிற்று. தேவன் அனேகம் பேரை தெரிந்தெடுத்தார், கடைசி நபர் உள்ளே வந்தவுடன் கதவு மூடப்பட்டு, அது முடிந்து விடும். 93. இரக்கத்தை வேண்டாம் என்று தள்ளின பின்பு, அங்கே நியாயத்தீர்ப்பை தவிர வேறொன்றும் இல்லை. இதோ, நாம் இங்கே பாதையின் முடிவில் இருக்கிறோம். இயற்கைக்கு மேம்பட்டது செய்யப்பட்டாயிற்று, அது பரிகாசம் செய்யப்பட்டு நகைப்பிற்குள்ளாக்கப்பட்டது. கடைசி காரியமானது, தேவன் தம்முடைய சொந்த வல்லமையிலும், அவருடைய சொந்த நேச குமாரனிலும் வந்து, அவருடைய சபையின் மூலமாக கிரியை செய்தார். அவர்களோ அதை, 'ஆன்மீகவாதம்' அல்லது 'பிசாசு' என்று சொல்லுகிறார்கள். நியாயத்தீர்ப்பை தவிர வேறு என்ன இன்னும் விடப்பட்டிருக்கிறது? ஓ, இங்கே, சுவற்றின் மேல் எழுதப்பட்ட கையெழுத்து இருக்கிறது. 94. ஆனால், அது அவ்வளவு நெருக்கத்தில் இருக்குமானால், எந்த ஒரு போதகருக்கும் தெரியும், உபத்திரவ காலத்திற்கு முன்னர் சபையானது எடுத்துக்கொள்ளப்படுதலில் போகும் என்று. ஆக அவ்வளவு நெருக்கமாயிருக்குமானால், பொழுது விடிவதற்குள் சம்பவிக்க கூடுமானால், எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்து என்ன-? அதை காட்டிலும் இது மிக நெருக்கமாக இருக்கிறது. ஓ, கர்த்தருடைய நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக-! கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாயிருக்கிறது. கையெழுத்து எழுதப் பட்டாயிற்று, வேதத்தில் எழுதப்பட்டுள்ளது, அதை காணும் படியாக நாமும் ஜீவித்து கொண்டிருக்கிறோம். 95. என்னுடைய சத்தத்தின் தூண்டுதலினாலே நீங்கள் இந்த மணி வேளையில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வீர்களா-? பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள். வாக்குத் தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், தூரத்திலிருக்கும் யாவருக்கும் உள்ளது. நாம் இரட்சிக்கப்படும்படி வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்கு உள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” என்றான். நீ கிறிஸ்துவினுடை-யவனாய் இராதவரை, நீ ஒரு மெத்தோடிஸ்டாக, பாப்டிஸ்டாக, பெந்தேகொஸ்தேயனாக, நசரேயனாக, கத்தோலிக்கனாகவோ இருக்கலாம். நீ கிறிஸ்துவினுடையவனாய் ஆகும் வரை இழக்கப் பட்டவனாயிருக்கிறாய். கிறிஸ்து உனக்குள்ளாக வருகிறார், அது பரிசுத்தாவியினால் உண்டாகும் புதிய பிறப்பாயிருக்கிறது. நாங்கள் ஜெபிக்கும் போது, இன்றிரவு அவரை பெற்றுக் கொள்ளுங்கள். 96. உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள். இந்த மகாபெரிய சம்பவம் நடக்குமென்று இங்குள்ளவர்களில் எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள் என எனக்கு வியப்பாயிருக்கிறது. ஒருக்கால் இன்றிரவு உங்கள் மனைவியோடு நீங்கள் படுக்கைக்குப் போகலாம், காலையில் பார்க்கும் போது அவள் போயிருப்பாள். தாயும் தகப்பனுமாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளை முத்தமிட்டு படுக்கைக்குப் போகலாம், காலையில் பார்க்கும் போது அந்த சிறிய படுக்கைகள் காலியாக இருக்கும். திருமதி. ஜோன்ஸ்-க்கு என்ன நடந்தது என்பதை அறிய நீங்கள் வீதியில் ஓடலாம், ஆனால், அவளும் கூட எடுத்துக் கொள்ளப்படுதலில் போயிருக்கலாம். எடுத்துக் கொள்ளப்படுதல் சமீபமாயுள்ளது. வேதம் மிகவும் தெளிவாய் கூறியுள்ளது. 97. இந்த கூட்டத்தில் உனக்கு தருணம் கிடைக்கும் போதே புத்தியுள்ள மனிதனைப் போன்று, புத்தியுள்ள மனுஷியைப் போன்று உங்களுடைய இருதயத்திற்குள் எழும் அந்த அழைப்பிற்கு கவனம் செலுத்தி, “கர்த்தராகிய தேவனே-! அந்த நித்திய ஜீவனை என்னிலே நிரப்பும்” என்று நீங்கள் ஏன் சொல்லக் கூடாது-? ஏனென்றால், உங்களுடைய ஆவி அறிவுப் பூர்வமான எண்ணங்கொள்ளுமானால், நீ இன்னும் பூமிக்குரியவனாய் இருக்கிறாய். ஆனால், பரலோகத்திலிருந்து வெளி வரும் தேவனுடைய ஆவியானது, உன் இருதயத்துக்குள் வந்து, உனக்குள்ளாக பரிசுத்த ஆவியை கொடுக்கின்றது. உபத்திரம் வரும் போது, ஆவியானது, பரிசுத்த ஆவியானது திரும்பவுமாக அதனுடைய சிருஷ்டி கர்த்தாவிடம் போகிறது, நீயும் அதனோடு போகின்றாய். நீ எவ்வளவு தான் பக்தியுள்ளவனாயிருந்தாலும் சரி, உன்னை கொண்டு போகும் படியாய் உள்ளே ஏதோ ஒரு காரியம் இல்லாமல் அது போக முடியாது. 98. இந்த செய்தியின் வாயிலாக எத்தனைப் பேர் தலை வணங்கினவாறு, உங்கள் கரங்களை கிறிஸ்துவுக்கு உயர்த்தி, "தேவனே, உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும். நீர் வருவீரானால், நான் உம்மோடு போக விரும்புகிறேன்," என்று கூறுவீர்கள்-? உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா-? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சபை முழுவதும் கரங்கள்-! சொல்லப் போனால், இருநூறுக்கும் அதிகமான கரங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றது. 99. பாவியான நண்பனே-! நீ கிறிஸ்துவை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதவனானால், இந்த நேரத்தில் உன் கரத்தை உயர்த்தி, “கர்த்தராகிய இயேசுவே, என் மேல் இரக்கமாயிரும்” என்று கூறுவாயா-? ஸ்திரீயே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னால் இருக்கிற உன்னை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது, “என்னை நினைவு கூறும், கர்த்தாவே...” அங்கே இருக்கிற உம்மை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களோடிருப்பாராக. “என்னை நினைவு கூறும், கர்த்தாவே-! என் கண்கள் இப்பொழுது தான் திறக்கப்பட்டது. அதிக காலமாக நான் என்னை ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொண்டு இருந்தேன் என்பதை உணருகிறேன். ஆனால், மறுபடியும் பிறப்பது என்பதை ஒரு போதும் அறியாதவனாயிருந்தேன். நான் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளவில்லை”. 100. ஆகையால், ஒரு மனிதன் மறுபடியும் பிறந்தால் ஒழிய, தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் அல்லது ராஜ்ஜியத்தை காணவும் கூட மாட்டான். 101. உங்கள் கரங்களை உயர்த்தி, “ஓ, பரிசுத்த ஆவியானவரே-! என் மேல் இரக்கமாயிரும். நீர் சபைக்காக வரும் போது, என்னை எடுத்துக்கொள்வீரா-?” என்று சொல்வீர்களா-? ஸ்திரீயே-! தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. “ஓ, தேவனே-! என்னை நினைவு கூறும்” என்று சொல்லும் வேறுயாராவது.. இங்கே, இளமையான... தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அங்கே உள்ள ஸ்திரீ, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அங்கே, பின்னால் உள்ள ஸ்திரீயே உம்மையும். "ஓ, தேவனே, சுவற்றில் மீது எழுதப்பட்ட கையெழுத்தை நான் பார்க்கும் போது, என் மேல் இரக்கமாயிரும்! வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதை இன்றிரவு நான் கண்டேன் என்று சொல்லக்கூடிய அறிவாற்றல் எனக்கு உண்டு. அதாவது, இது சரித்திரம் மீண்டும் நடைபெறுதலே”. 102. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். உதவி செய்யத் தக்கதாக அங்கே ஒன்றுமில்லை. உலகத்தை அழிக்கக்கூடிய காரியமானது, பாவமான மனிதனின் கரத்தில் இருக்கிறது. 103. இன்னும் கொஞ்சம் தான் உண்டு. கிறிஸ்துவினிடத்தில் வருவதற்காக நியமிக்கப்பட்டவர்களில் நீ ஒருக்கால் கடைசி ஆளாக இருக்கலாம். கடைசியான நபர் வந்ததும், நியாயத்தீர்ப்பு தாக்குகிறது. இன்னமும் ஒரு காரியம் குறைவாயிருக்கிறது, அது ஒருக்கால் நீயாக இருக்கலாம். நாங்கள் காத்திருக்கும் இவ்வேளையிலே இன்றிரவு நீங்கள் அவரை ஏற்றுக் கொள்வீர்களா-? 104. இருபது, முப்பது கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இங்கு ஜனங்களை முன்னால் கொண்டு வந்து நிறுத்தும்படியாக ஒரு பீட அழைப்பை கொடுக்க நமக்கு இடமில்லை. ஏனென்றால், நமக்கு இடம் ஏதும் இல்லை. ஆனால், நான் உங்களை கேட்கப் போகிறேன், நிச்சயமாக, உத்தமமாய் இருந்து எச்சரிப்பின் சத்ததிற்கு செவி கொடுங்கள். உத்தமமாயிருந்து, நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்தில் இருந்தே, “கர்த்தாவே, பாவியாகிய என் மேல் இரக்கமாயிரும். நான் கிருபையின் திரைக்கு பின்னால் அதை கடந்து போவதற்கு முன்னர் என்னை ஏற்றுக்கொள்ளும். நான் பாவம் செய்து, என் கிருபையின் நாளை விட்டு தூரமாகும் முன்பு, கர்த்தாவே என் மேல் இரக்கமாயிரும்!" என்று கேளுங்கள். அவர் அதை செய்வார். 105. ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தாவே-! இன்றிரவு நாங்கள் ஒரு பயங்கரமான நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். நாங்கள் உம்முடைய வார்த்தையை வாசிக்கும் போது, எந்த நேரத்திலும் வானொலி செய்தி திடீரென்று அறிவிக்கப்படலாம், ராக் & ரோல் இசைக்குழு “உம்மண்டை தேவனே,” என்ற பாட்டை பாடிக் கொண்டிருக்கலாம். அப்பொழுது மிகவும் காலம் கடந்ததாய் இருந்து, நியாயத்தீர்ப்பானது விழுந்து விட்டதாய் இருக்கலாம். ஏவுகணைகள் நம்மை நோக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மைல்கள் கணக்கில், மிகவும் அதிக அளவில், பூமியையே துடைக்கும் அளவுக்கு அணு சக்தியின் அழிவுகள், அது போன்ற காரியம் முழு உலகத்தை தீக்குள்ளாக்கும். அது பாவமான மனிதனின் கரத்தில் இருக்கிறது. அந்த விதமாகத் தான் அது சம்பவிக்கும் என்று வேதம் சொல்லுகிறது. நாம் சுவற்றின் மீது எழுதப்பட்ட கையெழுத்தை காண்கிறோம். 106. ஓ, தேவனாகிய கர்த்தாவே, இப்படிப்பட்டதான ஒரு செய்தியை இந்த ஜனங்களுக்கு கொண்டு வர நான் போதுமானவனாக இல்லை. இங்கே நின்று கொண்டு, இப்படிப் பட்டதான ஒரு பொருளைக் குறித்து பேச நான் எவ்வளவு சிறியவனாய் இருப்பதாக உணருகிறேன்-! ஆனால் அதை சரிவர செய்ய முடியாத என் பங்கிற்காக என்னை மன்னிப்பீரா-? ஆனால், எப்படியாயினும் நீர் விரும்புகிற வண்ணமாக இந்த செய்தியை அவர்களுடைய இருதயத்தின் ஆழத்திற்குள் புகுத்த வேண்டுமென்று என் இதய பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், வேளையானது நெருங்கி கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். இரக்கமாயிரும்-! தேவனே, ஒவ்வொருவரையும் இரட்சியும், அவர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்பும். அவர்கள் உம்முடைய பிள்ளைகளாய், உம்முடைய நன்மையினால் தெய்வீகமாய் சுற்றப்பட்டு, கர்த்தராகிய இயேசுவின் பாதுகாப்பைப் பெறுவார்களாக. 107. ஏனென்றால், நம்முடைய தேசம் பாதுகாப்பு அற்றதாய் இருக்கிறது. நாம் என்ன நினைத்தோம், அதே விதமாகத் தான் பாபிலோனிய ராஜ்யம் செய்தது, எல்லா நேரத்திலும் அதையே செய்தது. ஆனால், கிரியை செய்யத்தக்க ஒரு பொல்லாத தேசம் இருந்தது. நம்மை விட முன்னிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று இப்பொழுது நமக்கு தெரிய வரும் வரை, ஒரு பொல்லாத தேசமானது கிரியை செய்து கொண்டிருந்தது. நாமோ, அவர்களுடைய இரக்கத்தில் இருக்கிறோம். 108. கர்த்தாவே, சபையானது உம்முடைய இரக்கத்திற்காய் காத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அழித்து விடுவார்கள்; ஆனால், நீரோ உம்முடைய சபையை எடுத்துக்கொள்வீர். ஓ, கர்த்தாவே-! இன்றிரவு உம்முடைய பாதுகாப்பிற்குள் எங்களை எடுத்துக்கொள்ளும். இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாய் எங்களை ஆசீர்வதியும், இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம், ஆமென். 109. ஒரு நிமிடம், மென்மையாக, பயபக்தியாக இருங்கள். (பிரன்ஹாம் "Softly and tenderly Jesus is calling" என்ற பாடலை பாடுகிறார்.) மெதுவாகவும் மென்மையாகவும் இயேசு அழைக்கிறார். உனக்கான எனக்கான ஒரு அழைப்பு... இப்பொழுது நாம் பாடுகையில், அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் வாசலில் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் உனக்கான எனக்கான ஒரு கவனிப்பு வீட்டுக்கு வாருங்கள், எங்கே-? மேலே, மேலே உயர வாருங்கள் சோர்வுற்றவர்கள் வீட்டுக்கு வாருங்கள் ஆர்வத்தோடும் மென்மையோடும் இயேசு அழைக்கிறார் அழைக்கிறார் ஓ, பாவியே வீட்டுக்கு வா..... 110. ஓ, இப்பொழுது அது சம்பவித்தால் அது என்னே ஒரு அற்புதமான நேரமாய் இருக்கும். ஓ, அது எல்லாம் சரி, எந்த நேரத்திலும் அவர் ஆயத்தமாயிருக்கிறார். ஆமென்-! அவரை நான் அறிய மிகவும் ஆவலாயிருக்கிறேன். இங்கே நலிந்து போனதும், தளர்ந்ததுமான இந்த சரீரம் ஒரு நொடிப் பொழுதில் கண்ணிமைக்கும் நேரத்தில் மாறி போகும் என்பதால் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். நான் என்றென்றைக்குமாய் ஜீவிக்கும் படியாக, மீண்டுமாக ஒரு வாலிபனாவேன். அங்கே முதியோர் என்றென்றைக்குமாய் இளமையாய் இருப்பார்கள். ஒரு நொடிப் பொழுதில் மறுரூபமாக்கப் பட்டவர்களாய் அழியாமை உள்ளவர்களாய் அவருடைய சாயலில் இருப்போம். நட்சத்திரங்கள் மற்றும் சூரியனை காட்டிலும் அதிகமாய் பிரகாசிப்பார்கள். என்னே ஒரு தருணம்-! அவரை தள்ளி போடாதீர்கள். அந்த நித்தியமான நாளில் "ஓ, நன்றாய் செய்தாய்," என்று அவர் சொல்வதைக் கேட்க நீ எவ்வளவாய் வாஞ்சிக்கிறாய்-! அருமையான இரட்சகரை உன் இருதயத்தில் இருந்து புறம்பே தள்ளாதே, அவரை தள்ளி போடாதே. (அது இரவாய் இருக்கட்டும்). 111. உங்கள் முழு இருதயத்தோடும் எத்தனை பேர் அவரை நேசிக்கிறீர்கள்-? அவர் வந்தால் எத்தனை பேர் ஆயத்தமாய் இருக்கிறீர்கள்-? ஓ, எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். உள்ளாக, இப்பொழுது நீங்கள் கிழிக்கப்பட்டதாக உணரவில்லையா-? சுவிசேஷமானது, வார்த்தையாகிய தண்ணீரினால் நாம் கழுவபட்டிருக்கிறோம் என்பதாகும். உனக்கு அடுத்து இருப்பவர்களோடு உன் கரங்களைக் குலுக்கி, “தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக-! நான் மிகவும் நன்றாய் உணருகிறேன். பிரயாணியே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக-! சகோதரியே, சகோதரனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக-!” என்று சொல்லுங்கள். நாம் சாலையில் பிரயாணம் செய்கிறவர்களாய் இருக்கிறோம். அழகான பழைய நெடுஞ்சாலயில் நடந்து கொண்டு, நான் போகின்ற இடமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனக்கு தெரிந்த எதைக் காட்டிலும் நான் ஒரு பழங்கால கிறிஸ்தவனாக இருப்பேன். 112. இப்பொழுது, நாம் இந்த பயபக்தியான நொடியிலே இருக்கும் போது, ஜெப வரிசையை அழைப்பதற்கு காலம் கடந்ததாகி விட்டதென்று நான் நினைக்கிறேன். இந்த பெரிய எண்ணிக்கையானவர்கள் கிறிஸ்துவிடம் வருகின்ற படியினால், பரிசுத்த ஆவியானவர் சந்தோஷமாயிருப்பாரென நம்புகிறேன். சீக்கிரமாக நீங்கள் உங்களுக்கு ஒரு சபையை கண்டு பிடித்து, ஞானஸ்நானம் பெற்று, ஒரு நல்ல ஆவியினால் நிறைந்த அந்த சபைக்குப் போய், அங்கே நீங்கள் மரிக்குமட்டாய் தரித்திருங்கள். 113. கிறிஸ்துவானவர் தாம் செய்வேன் என்று வாக்குரைத்த கிரியைகள் என்ன-? அவர், "நான் செய்கின்ற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்றார். அப்படியானால், அவரது சமூகம் இங்கே இருக்கின்றது. அப்படியானால், எனக்கு தெரியும் நண்பர்களே. எனக்கு தெரியும், எந்தவித சந்தேகமுமின்றி, இயேசுவானவர் இங்கே இருக்கிறார். இங்கே ஒரு மனிதர் இருக்கிறார், கலிலேயாவில் நடந்த அதே மனிதனவர். தன்னுடைய இரத்தத்தினாலே உன்னை மீட்டெடுத்து, தன்னுடைய தழும்புகளாலே உன்னை சுகப்படுத்தின அதே மனிதர். அவர் செய்த எல்லா காரியத்தையும் இங்கே நடப்பிக்கும் படியாய் அவர் இங்கே இருக்கிறார், ஏனென்றால், அவர் அதே கர்த்தராகிய இயேசுவே. 114. இப்பொழுது, அமைதலாக நாம் சற்று ஜெபம் செய்வோம். பரிசுத்தாவியானவரின் சிந்தையை நான் அறிந்து கொள்ளும் தருவாயில், நீங்கள் சற்று ஜெபத்தில் இருங்கள். 115. ஓ, என்னே-! அருமையான இன்னிசை, வேதனையிலிருக்கிற ஜனங்கள் அதை எவ்வளவாய் கேட்க வாஞ்சிப்பார்கள். இன்றிரவு, நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிற ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ஜனங்கள், சுவிசேஷத்தைக் கேட்டு கடந்து போய், இன்றிரவு வேதனையில் இருக்கிற அவர்கள், நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிற இந்த ஆசனத்தில் உட்கார எவ்வளவு ஆசையாய் இருப்பார்கள். இப்பொழுதோ அதிக தூரம் கடந்து போய் விட்டார்கள். 116. கர்த்தாவே, நீரே வானங்களையும் பூமியையும் உண்டாக்கினீர், ஆசீர்வதிக்கப்பட்ட இயேசுவை இந்த பூமிக்கு அனுப்பினீர். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் அவருக்குள் வாசமாய் இருந்தது. நீர் அவருடைய உதடுகளின் மூலமாய், “நானே திராட்சைச் செடி, நீங்கள் கொடிகளாயிருக்கிறீர்கள். திராட்சை செடியானது தன்னில் தானே கனி கொடுக்கிறதில்லை. ஆனால், கிளைகளே கனிகளைக் கொடுக்கிறது” என்றீர். தேவனே, இப்பொழுது பிரசிங்கிக்கப்பட்ட இந்த செய்தியானது, உம்மிடத்திலிருந்து வந்ததென்றும், கடைசி நாட்கள் சமீபமாயிருப்பதால் நீர் எங்களை ஆயத்தமாய் இருக்கும்படி எச்சரிக்கிறீர் என்றும் காட்டும்படி, இன்றிரவு எங்கள் மத்தியில் உம்மை ரூபகாரப்படுத்துமாறு ஜெபிக்கிறேன். 117. கர்த்தாவே, சுகவீனமான ஜனங்கள் ஒருக்கால் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கலாம். அவர்கள் சுகமடையும் படியாக அவர்களுக்கு உற்சாகமூட்டும், தேவனுடைய மகிமைக்காக இதைக் கேட்கிறோம். இப்பொழுது, கர்த்தாவே, எங்களை உமக்கு ஒப்புக் கொடுக்கும் வேளையிலே, ஜீவிக்கும் தேவனுடைய சபையாய் காண்கிறதினாலே, எல்லா கரங்களும் உயர்த்தப் பட்டுள்ளன என நான் நினைக்கிறேன். இன்றிரவு, கர்த்தாவே, எங்களுக்கு ஏதாவது விசேஷமாக செய்ய வேண்டுமென்று உம்மை நான் கேட்டுக் கொள்கிறேன். பரிசுத்த ஆவியானவர் தாமே தங்கள் மூலமாய் அசையும் வண்ணமாய், ஜனங்கள் தங்களை அந்த விதமாக ஒப்புக் கொடுக்கும்படி அருள் செய்வீராக-! உம்முடைய வரங்களின் மூலமாக நீர் கிரியை செய்து, எங்கள் மத்தியில் அந்நியர்கள் இருக்கலாம் என்பதால், எங்கள் மத்தியில் உம்மை நிரூபிக்கும் வண்ணமாக , நானும் கூட என்னை உமக்கென்று விட்டு கொடுக்கிறேன். இயேசுவின் நாமத்தில் விண்ணப்பிக்கிறோம், ஆமென். 118. (டேப்பில் காலி இடம் - Ed) ...நியாயத்தீர்ப்புக்கு முன்பாக அவர் எப்பொழுதும் இரக்கத்தை காட்டுபவராக இருக்கிறார். ஊழியகாரர்கள் யாவரும் அங்கேயே தரித்திருந்து ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நாம் ஜெபிப்போம். 119. இப்பொழுது, விஷேசமாக, நான் பிரசிங்கித்துக் கொண்டிருக்கையில், பின்னால் இருக்கிற உங்களையோ அல்லது எங்கிருந்தாலும் சரி, உங்களை ஒன்று கேட்டுக் கொள்கிறேன், இதை சொல்ல ஆரம்பியுங்கள். வேதம் இதை சொல்லுகிறது, ''நம்முடைய பெலவீனங்களினால் தொடப்படக் கூடிய ஒரு பிரதான ஆசாரியன் அவரே." நல்லது, அப்படியானால் நேற்று இருந்த பிரதான ஆசாரியன் அவராக இருப்பாரானால், அவர் இன்றைக்கும் மாறாதவராக இருக்கிறார். அவர் மாறாதவராக இருப்பாரானால், நேற்று அவர் செய்த காரியங்கள் யாவற்றையும் இன்றைக்கும் செய்வார். அது சரி தானே-? ஆகவே, இப்பொழுது அவர் தொடப்படக்கூடியவராக இருப்பாரானால், உங்களுடைய பலவீனங்களினால் நீங்கள் அவரை தொடுங்கள், அவர் திரும்பி பேசட்டும். 120. சற்று சிந்தியுங்கள்-! ஒரு நாள் இப்படிபட்ட கூட்டத்தாரால் அவர் சூழப்பட்டிருக்கும் போது, பேதுரு அல்லது சீமோன் என்ற பெயருடைய மனிதன் அங்கு வந்தான். அவர் அவனைப் பார்த்து, "உன்னுடைய பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன். ஆனால், இனிமேல் நீ பேதுரு என்று அழைக்கப்படுவாய்'' என்றார். அவன் யாராய் மாறினான்-? அன்பான அப்போஸ்தலனானான். 121. பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டபொழுது அவனோடு வந்தான். அவர் அவனைப் பார்த்து, "இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்”. வேறு வார்த்தையில் கூறினால், “ஒரு கிறிஸ்தவன், ஒரு உண்மையான மனிதன்” என்றார். அவன், “ரபீ, என்னை உமக்கு எப்படி தெரியும்-?'' என்றான். 122. அவர், “பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்பாக நீ மரத்தின் கீழ் இருந்தபோதே உன்னைக் கண்டேன்” என்றார். 123. உதிர போக்குள்ள ஸ்திரியானவள் வெளியே வந்தாள். அவர் ஜனக்கூட்டத்தை நோக்கிப் பார்த்தார். 124. அவருடைய கிரியைகள் பிசாசினால் ஆனதென்று எண்ணி, தங்கள் இருதயத்தில், "அவர் பெயல்செபூல்” என்றார்கள். அவர் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்தார். அது சரிதானே-? 125. அவர், “பிதாவானவர் முதலாவதாக எனக்கு காண்பித்தாலொழிய, தாமாய் ஒன்றும் செய்ய மாட்டார். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” என்றார். ஆகவே, அவர் அவருடைய சபையில் கிரியை செய்வாரானால், அவர் அவ்விதமாய் இருக்க வேண்டும், ஏனென்றால், அது அவருடைய வார்த்தையாயிருக்கின்றது. 126. இப்பொழுது நான் உங்களைக் கேட்கிறேன். இந்த கூட்டத்தில், தேவன் தாமே இரண்டு அல்லது மூன்று பேருக்கு, விசுவாசத்தினால் அவருடைய வஸ்திரத்தைத் தொடும்படி அருள் செய்து, அவர் தமது ஆவியில் திரும்பி, அவர் பூமியில் இருந்த போது செய்த அதே கிரியைகளை செய்து காட்டுவாரேயானால், நீங்கள் யாவரும் திருப்தியாகி அவர் உங்களுடைய சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்வீர்களா-? நீங்கள் அதை செய்வீர்களா-? நீங்கள் அதை செய்வீர்களானால் 'ஆமென்' என்று சொல்லுங்கள். (சபையார் ‘ஆமென்' என்று சொல்கின்றனர்- Ed.) அதை அருளுமென்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. இப்பொழுது நீங்கள் ஜெபியுங்கள். நீங்கள்... 127. இங்கே இருக்கிற வியாதியஸ்தர்கள் எத்தனை பேர்களுக்கு சுகம் வேண்டும்-? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். எங்கு பார்த்தாலும், சரி, வியாதியஸ்தர்கள் சுகம் பெற விரும்புகிறார்கள். 128. இந்த கட்டிடத்தில் இருப்பவர்கள் யாராவது... நான் நோக்கிக் கொண்டிருக்கிற உங்களை எனக்கு யார் என்று தெரியாது. 129. இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறவர் சகோதரி. ரோசல்லா என்று நினைக்கிறேன். மதுபானப் பிரியராக இருந்த ஒரு சிறிய பெண். ஒரு மது பானப் பிரியராயிருந்து, வைத்தியர்களால் விட்டு விடப்பட்டவள். கூட்டங்களில் ஒன்றில் அவள் பெயர் சொல்லி அழைக்கப்பட்டாள். அவள் கர்த்தரால் அழைக்கப்பட்ட போது, நான் அவளைக் கண்டதும் கிடையாது, அறிந்ததும் கிடையாது என்பதை அந்த பெண் அறிந்திருந்தாள். அவளுடைய ஜீவியத்தைக் குறித்தும், அவளுடைய நிலைமையைக் குறித்தும் சொல்லி, அவள் சுகமடையப் போகிறாள் என்பதாக கர்த்தர் சொன்னார். இதோ, அவள் இன்றிரவு இங்கே கிருபையின் மகுடமாக இருக்கிறாள். ஒரு மதுபானப் பைத்தியம், வைத்தியர் மேல் வைத்தியராக ஒன்றும் செய்ய முடியாது கை விரித்தார்கள், ‘Alcoholics Anonymous'-யாலும் கூட (Alcoholics Anonymous மதுபான பைத்தியர்களுக்காக, அவர்களை அதனின்று காப்பாற்றும் நோக்குடன் 1935-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 'சர்வதேச பரஸ்பர உதவி ஐக்கியம்' என்ற அமைப்பு - Ed). நான் அவளை அறிவேன். 130. ஆனால், நான் நிச்சயமாக, என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிற இந்த சகோதரன் இங்கே சாம்பல் நிற சூட் அணிந்து கொண்டிருப்பவர், அவர் இங்கே நமக்கு பூக்கள் கொண்டு வருபவர், அது சரி என்று நம்புகிறேன். அவருடைய பெயர் இப்பொழுது எனக்கு ஞாபகம் வரவில்லை. சமீபத்தில் அவர் என் வீட்டிற்கு, சகோதரன் போஸ், சூட்ஸ், சகோதரன் சூட்ஸ் அவர்களோடு கூட வந்தார். 131. அது தவிர, சற்று முன்னர் சகோதரன் பிரட் சாத்மென்னைப் பார்த்தேன் என்று நினைக்கிறேன். இங்கே, இந்த கட்டிடத்திற்குள் தான், ஆனால் அது எங்கே என்று நான் மறந்து விட்டேன். எப்படியோ அவர் இருந்தார், எனவே, இங்கே எங்கோ இருக்கிறார். 132. எனக்கு வேறு யாரையும் தெரியாது. ஆனால், உங்கள் யாவரையும் கர்த்தர் அறிவார். நீங்கள் மாத்திரம் ஜெபித்து, தேவனை கேட்பீர்களானால்..... உங்கள் விசுவாசத்தைச் சோதித்துப் பாருங்கள். 133. யாரும் இங்கும் அங்கும் அசைய வேண்டாம். அடுத்த சில நிமிடங்களுக்கு உண்மையாக பயபக்தியாயிருங்கள். இப்பொழுது உங்களால் முடியுமானால் 'நம்பிடுவாய்' என்ற பாடலை பாடலாம். எவ்வளவு பயபக்தியாய் உங்களால் இருக்கக் கூடுமோ, அவ்வளவாய் ஒரு சில நிமிடங்கள் அமைதலாய் அமர்ந்திருங்கள். (இசை வாசிப்பவர் ‘நம்பிடுவாய்' என்ற பாடலை வாசிக்கிறார் - Ed.) 134. சற்று சிந்தியுங்கள், கிறிஸ்து அதை வாக்களித்திருக்கிறார். “இன்னும் கொஞ்ச காலத்திலே, உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், நான் ஏனெனில், 'நான்' என்பது இன்னொருவர் அல்ல, 'நான்' என்பது ஒரு தனிப்பட்ட பிரதிப் பெயர். “உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடு கூட இருப்பேன். நான் செய்கின்ற கிரியைகளை, நீங்களும் செய்வீர்கள்''. "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”. அது உண்மைதானே? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - Ed.) அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். 135. நல்லது, நான் தேவனுக்கு மிகவும் நன்றி உள்ளவனாய் இருக்கிறேன். நீங்கள் விரும்பினால் உங்கள் தலைகளை நீங்கள் உயர்த்தலாம். 136. சரியாக இங்கே மூலையில், ஒரு ஸ்திரீ, சரியாக இங்கே அந்த மூலையில் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள். அவள் ஒரு கருப்பின ஸ்திரீயாக இருக்கிறாள். ஸ்திரீயே, உன்னை எனக்கு தெரியாது. தேவன் உன்னை அறிவார். ஆனால், அங்கே அந்த வெளிச்சம் ஆனது இப்பொழுது அந்த ஸ்திரீக்கு மேலாக இருக்கின்றது. அவளுக்கு... உனக்குள்ள கோளாறு என்ன என்பதையும், நீ எதைக் குறித்து ஜெபித்துக் கொண்டிருக்கிறாய் என்பதையும் கர்த்தர் எனக்கு வெளிப்படுத்துவாரானால், உனக்கு உதவி செய்பவர் கர்த்தராகிய இயேசுவே என்று நீ விசுவாசிப்பாயா? நீ தொல்லைக்குள்ளாக இருக்கிறாய், அல்லது நீ எதையோ வாஞ்சிக்கிறாய் ஏனென்றால், அது இங்கே இருக்கின்றது. 137. நண்பர்களே, பாருங்கள், நீங்கள் சொல்லலாம், “சரி நான் அதை பார்க்கவில்லையே” என்று. அதை நீங்கள் காண முடியவில்லையென்பது சம்பவிக்கக் கூடியதே. நான் அதை சரியாக நேராகப் பார்க்கிறேன். புரிகின்றதா? நீங்கள், “சகோதரர் பிரான்ஹாம், உம்முடைய புலன்களால் அதைக் காணக் கூடுமானால், எங்களாலும் கூட காண முடியுமே-?" எனலாம். ஓ, இல்லை . 138. இயேசுவானவர் ஒளியின் ரூபத்தில் இருப்பதை பவுல் கண்டான், ஆனால் அவனோடு இருந்தவர்கள் அதைக் காண முடியவில்லை. பாருங்கள்-? வானசாஸ்திரிகள் நட்சத்திரத்தைக் கண்டார்கள், அந்த வெளிச்சம் அவர்களை வழி நடத்தினது. ஆனால் வேறு ஒருவரும் அதை காணவில்லை. அது வெறுமனே சிலருக்குத் தான். அவை வரங்களாகும். 139. அந்த ஸ்திரீக்கு சைனஸ் தொந்தரவு இருக்கிறது. சரிதானே? உனக்கு இருதய நோயுங்கூட இருக்கிறது. அது முற்றிலும் சரியே. (அந்த சகோதரி, “மகிமை-! அல்லேலூயா-! இயேசுவே-! உமக்கு நன்றி” என்கிறாள்-Ed.) கவனியுங்கள். உன்னுடைய பெயர், உன்னை 'எஸ்சி' என்று அழைப்பார்கள். ("அது சரியே") ம். ம்... உன்னுடைய கடைசி பெயர் 'அப்சாயர்' (“அது சரியே சகோ. பிரன்ஹாம்'). நீ வடக்கு கிளீவ்லேன்ட் வீதியில் வசிக்கிறாய். உன்னுடைய விலாசம் 1264. (“அது முற்றிலும் சரியே”). நீ... ஸ்திரீயே, நீ எதையோ தொட்டிருக்கின்றாய். நீ என்னை தொடவில்லையென்று உனக்குத் தெரியும். 140. உனக்கு அடுத்து உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த பெண், அவளும் கூட ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் வேறு யாருக்காகவோ ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அது உன்னுடைய தாயாருக்காக, அவளுடைய நுரையீரலில் ஏதோ கோளாறு இருக்கிறது. இங்கே இருக்கும் அந்த ஸ்திரீயோடு உனக்கு ஏதோ தொடர்பு இருக்கிறது. நீ அவளுடைய மருமகள். உன்னுடைய பெயர் மார்கரெட். அது சரியே! நீயும் அதே இடத்தில் வசிக்கிறாய். நீ வருவதையும், உள்ளே போவதையும் காண்கிறேன். 141. அதற்கடுத்ததாக உட்கார்ந்திருக்கும் அந்த மனிதன், ஐயா, அதைக் குறித்து நீர் என்ன நினைக்கிறீர்-? இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நீர் விசுவாசிக்கின்றீரா-? விசுவாசிக்கின்றீரா-? உனக்குள்ள தொல்லை என்னவென்று கர்த்தர் எனக்கு வெளிப்படுத்துவாரானால், நீ அவரை ஏற்றுக் கொள்வாயா-? உனக்கு வயிற்றுத் தொல்லை. அது சரி. அது சரியானது என்றால் எழும்பி நில்லுங்கள். சரியாக-! நீர் ஒரு பிரசங்கி. நிச்சயமாக நீங்கள், “அவர் பிரசங்கியார் போன்று ஆடை அணிந்திருப்பதினால்” என்று சொல்லலாம். 142. சரி, அதுமட்டுமல்லாமல், யாரோ உம்மை ஒரு 'பிரஸ்பிட்டேரியனாக' இருப்பார் என எதிர் பார்க்கிறார். ஆனால், நீ ஒரு பெந்தேகொஸ்தே பிரசங்கி. அது சரியே. ஆமென். உம்முடைய பயப்படுதல் தான் உமக்கு அல்சர் உருவாக செய்தது. அது போய் விட்டது. சகோதரனே-! வீட்டுக்குப் போங்கள், சுகமாக இருங்கள். ஆமென். தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், சந்தேகப்படாதீர்கள். 143. நேராக இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பவர், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்-? ஆம். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என்னை தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கின்றீர்களா-? அல்லது தேவனிடத்திலிருந்து உமக்கு ஏதாவது தேவையா-? உனக்கு என்ன தேவையென்று தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று செய்யப்பட்டதென்று நீ விசுவாசிப்பாயா-? சரியாக இயேசுவானவர் சொல்வது போன்றே நீ விசுவாசிப்பாயா-? (அந்த சகோதரி, "உன் முழு இருதயத்தோடும்'' என்கிறாள்). உன் முழு இருதயத்தோடும். உனக்கு ஒரு வளர்ச்சியிருக்கிறது. அந்த வளர்ச்சி உன் இடுப்பு பகுதியிலிருக்கிறது. சரிதானே-? உனக்கு கூட வயிற்றுக் கோளாறும் இருக்கிறது. அது ஒரு பதட்டமான நிலையின் காரணமாக ஏற்பட்டது. அது சரி தான். உன் பெயர் எவாமே. உனது கடைசிப் பெயர் ரீட்மேன். நீ 1378, மேற்கு 13-வது வீதியில் வசிக்கின்றாய், அது சரிதானே-? நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று நீ அறியும் படியாக, அங்கே உன்னுடைய சிறிய பெண் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள். அவளுக்காக நீ ஜெபிக்க வேண்டுமென்று விரும்புகிறாய். அந்த சிறு பெண்ணுக்கு 'இரத்தப் போக்கு'' (HEMORRAGE) இருக்கிறது. அவள் உணர்ச்சி மேலிடும் போது அல்லது மிகவும் அழும் போது, அது வருகிறது. அது கர்த்தர் உரைக்கிறதாவது. அந்த சிறிய பையன் அவளுடைய சகோதரன். அது சரிதானே-? அந்த சின்ன பையனுக்காகவும் நீ ஜெபிக்க விரும்புகிறாய். அவன் மலச்சிக்கலினால் கஷ்டப்படுகிறான். சமீபத்தில் அவன் எடையும் கூட மிகவும் குறைந்து விட்டது, இல்லையா-? அது கர்த்தர் உரைக்கிறதாவது. 144. உனக்கு அடுத்தார் போல் உட்கார்ந்து கொண்டிருக்கும் வெள்ளை நிற ஸ்திரீ, அவள் எதைக் குறித்தோ கலக்கமாக இருக்கிறாள். சகோதரியே, நீ விசுவாசிக்கிறாயா-? புறஜாதி தலைமுறைக்கு அவர் சீக்கிரம் வருகிறார் என்பதை பிரகடனப் படுத்த, தேவன் தம்முடைய குமாரனை, இயேசுகிறிஸ்துவை அனுப்பினார் என்று நீ விசுவாசிக்கின்றாயா-? உனக்கு சுரப்பிகளில் கோளாறு, பெருங்குடலில் கோளாறு, பதட்டமாக இருக்கிறாய். நீ இந்த பட்டணத்திலிருந்து வரவில்லை . நீ (DETROIT) டெட்ராய்டிலிருந்து வருகிறாய். நீ 12134 எண்ணுள்ள (Fandler) ஃபேன்ட்லெர் வீதியில் வசிக்கின்றாய். அது சரியே. டெட்ராய்ட், மிச்சிகன். நீ ஒரு இத்தாலியன். உன்னுடைய பெயர் வயோலா பொலொம்பா. ஓ, தேவனிடத்தில் விசுவாசமாயிருந்து, நீ கேட்டுக் கொள்வதைப் பெற்றுக் கொள். 145. இங்கே கீழே, வழியில் இருக்கும் உம்மை, நீ என்ன நினைக்கின்றாய்-? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றீர்களா? (சபையார் ‘ஆமென்' என்று சொல்கின்றனர்-Ed.) 146. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கின்ற சிறிய ஸ்திரீயே உன்னைக் குறித்து என்ன-? கடைசியில் இருக்கும் ஸ்திரீயே, நீ உன் முழு இருதயத்தோடு விசுவாசிக்கின்றாயா-? உங்களில் யாராவது ஒருவர், யாராயிருந்தாலும் பரவாயில்லை . அவளுக்கு அடுத்து, பக்கத்தில் இருப்பவள் நீ என்ன நினைக்கின்றாய்-? நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா-? அங்கே உட்கார்ந்து கொண்டு, என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சிறு தாயே, உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா-? உனக்குள்ள நரம்பு சம்பந்தமான காரியத்தை (சுருள் சிரை நாளங்கள் - varicose veins- நரம்பு சுருண்டிருப்பது-Ed.) தேவன் சுகப்படுத்துவாரென்று விசுவாசிக்கிறாயா-? நீ விசுவாசிக்கிறாயா-? ஒருக்கால் நீ இதை சிந்தித்தால், அதாவது உன்னுடைய புருஷனுக்கு காது கோளாறு இருந்தது என்று சொல்வேனானால் நீ அதிகமாக விசுவாசிக்க கூடும். அவருக்காகவும் ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறாய். அது முற்றிலும் சரியே, Uh-huh. இப்பொழுது நீ என்னை விசுவாசிக்கிறாயா-? முதலில் நீ அதை பெறாமல் இருந்தாய். அந்த விதமான காரியங்கள் உன்னை இக்காரியத்துக்கு தட்டி எழுப்பினது, ஏனென்றால், நீ அப்பொழுது உன் சுகத்தைப் பெற்று கொண்டாய். 147. அவளுக்கு அடுத்தவள், ஸ்திரீயே, உன் கரத்தை உயர்த்தினாய். அதைக் குறித்து என்ன நினைக்கிறாய்-? தேவன் உன்னை சுகப்படுத்துவாரென்று நீ விசுவாசிக்கின்றாயா-? (அந்த சகோதரி, "அவரால் முடியும் என நான் அறிந்திருக்கிறேன்'' என்கிறாள் - Ed.) நீ விசுவாசிப்பாயா-? சரி, அப்படியானால் உன்னுடைய மூட்டு வியாதி (arthritis) உன்னை விட்டு நீங்கி விடும். உம்மால் விசுவாசிக்க கூடுமா-? Huh? 148. நீ என்ன நினைக்கிறாய்-? ஐயா, கரத்தை அசைத்து காட்டினீரே உம்மைத் தான். தேவன் உம்முடைய இருதய நோயை சுகப்படுத்தி சொஸ்தமாக்குவாரென்று விசுவாசிக்கின்றீரா-? அவர் செய்வாரென்று நீ விசுவாசிக்கின்றீரா? 149. உன்னைத்தான், உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறாயே-! நீயும் கூட விசுவாசிக்கின்றாயா-? உனக்கும் கூட இருதயக் கோளாறு உண்டு. இல்லையா-? ஆம். சர்க்கரை வியாதி உனக்கு உண்டு. அது சரியே. தேவன் உன்னை சுகப்படுத்துவாரென்று நீ விசுவாசிகின்றாயா-? அப்படியானால் நீ பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? (சபையார், 'ஆமென்' என்கின்றனர் - Ed.) தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். 150. இங்கே கீழே, ஐயா, கடைசி ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பவரே, நீர் விசுவாசிக்கின்றீரா-? நீர் விசுவாசிக்கத் தான் வேண்டும். நீ இப்பொழுது தான் சுகப்படுத்தப்பட்டாய். உனக்கு பாதக்கோளாறு இருந்தது. அப்படித் தானே-? கர்த்தராகிய இயேசுவை நீ விசுவாசித்து.... இப்பொழுது நீ வேறு யாருக்கோ ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். அது உனது சகோதரன். அவர் விஸ்கான்ஸின்-ல் இருக்கிறார். அவருடைய நுரையீரலில் இப்பொழுது தான் அறுவை சிகிச்சை நடந்தது. அதில் பாதி பாகம் எடுக்கப்பட்டாயிற்று. அது சரி. நீ விசுவாசிக்கிறாயா-? அப்படியானால், நீ கேட்கிறதைப் பெற்றுக் கொள். ஓ-! கர்த்தருடைய நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக-! நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன் பாவிக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை துதிப்பேன் அவருக்கு மகிமை செலுத்துங்கள், அனைவரும் ஒவ்வொரு கறையையும் அவரது இரத்தம் நீக்கிவிட்டதால்... 151. ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தாவே, ஒரு நாள் நீர் வானத்தில் அக்கரையில் வரப்போகிறீர். இப்பொழுது நீர் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் இங்கே இருக்கிறீர் என்று நாங்கள் அறிவோம். உம்மை பரிபூரணமாய் நீர் எங்களுக்கு அறிவித்துள்ளீர். உலகத்தால் அதைப் பார்க்க முடியாது, கர்த்தாவே-! அதை நாங்களும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால், "அவர்கள் இனி என்னைக் காண்பதில்லை,'' என்று நீர் சொன்னீர். ஆனால், உம்மைப் பார்க்கக் கூடியதான பிள்ளைகள் உமக்கு இருக்கிறார்கள் என்று நாங்கள் அறிவோம். உம்மை அறிந்துள்ள பிள்ளைகள் எங்களுக்கு உண்டு. நாங்கள் அதற்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். 152. அந்த மகத்தான பரிசுத்த ஆவியோடு கூட, நீர் இந்த கட்டிடத்தை அப்படியே சுற்றி வளைத்து, இங்குள்ள வியாதியஸ் தர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும். இப்பொழுது உமக்கு மகிமையை எடுத்துக் கொள்ளும், கர்த்தாவே-! மரித்த நிலையில் ஜனங்கள் அமர்ந்திராமல் அவர்கள் எழுந்து பிரகாசித்து, தேவனுக்கு ஸ்தோத்திரத்தையும், மகிமையையும் செலுத்துவார் களாக. இயேசுவின் நாமத்தில் ஆமென். 153. நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களேயானால், காலூன்றி எழும்பி நின்று, உங்கள் முழு இருதயத்தோடும் அவருக்கு துதி செலுத்துங்கள். அவருடைய மகத்தான மகிமைக்காக, அவர் இப்பொழுது உங்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்துகிற படியால், கர்த்தராகிய இயேசுவில் களிகூறுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.